அமெரிக்கா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், உள்ள ஒரு வீட்டில் விண்வெளியில் இருந்து சிறிய விண்வெளி குப்பை ஒன்று வீட்டின் மீது விழுந்துள்ளது. அதில் அந்த வீட்டின் கூரை உடைந்து நொறுங்கியிருக்கிறது. இதன் காரணமாக அந்த வீட்டில் வசித்து வந்த குடும்பமானது நாசாவிடம் 80,000 அமெரிக்க டாலர் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவம் குறித்தது சட்ட நிறுவனமான க்ரான்ஃபில் சம்னர் (Cranfield Sumner) செய்தி நிறுவனமான AFPக்கு அறிக்கை ஒன்றை தெரிவித்தார். அந்த அறிக்கையில்,”கடந்த மார்ச் 8 […]
பென்சில்வேனியா: அமேசான், ஃபிலிப்கார்ட் போல டோர் டெலிவரி செய்யும் ஒரு நிறுவனம் தான் ஃபெட்எக்ஸ் (FedEx). சமீபத்தில் ஒரு அமெரிக்காவின், பென்சில்வேனியா எனும் இடத்தில் ஒரு குடியிருப்பில் ஒரு வீட்டு வாசலில் வைத்து சென்ற ஃபெட்எக்ஸ் பார்ஸலுக்காக 2 திருடர்கள் போட்டி போட்டு சண்டை இட்டு கொண்டுள்ளனர். இது சம்மந்தமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஃபெட்எக்ஸ் ஊழியர் ஒருவர் அந்த பார்சலை அந்த உரிமையாளர் வீட்டின் வாசல் முன் வைத்து விட்டு செல்வார். […]
அமெரிக்கா : ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்டைஸில் உள்ள மளிகைக் கடைக்கு வெளியே வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இரண்டு சட்ட அமலாக்க அதிகாரிகள் எனவும் தெரிய வந்துள்ளது. மருத்துவமனையில் உள்ள அவர்களின் நிலைமைகள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று செய்தியாளர் சந்தித்த போலீசார் தகவலை தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், ஆர்கன்சாஸ், நியூ […]
டொனால்ட் டிரம்ப்: இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கான களம் நாளுக்கு நாள் சூடு பிடித்துக்கொண்டே இருக்கிறது. இதில் ஒரு முனையில் அதிபர் ஜோ ஃபைடனும், மறுமுனையில் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் என அமெரிக்கா பொதுத்தேர்தலுக்கான பேச்சுகள் அனல் பறக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில் தான் டொனால்ட் ட்ரம்ப் ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். அவர் பேசியதை கேட்டு ஒட்டு மொத்த அமெரிக்கா மக்களையும், குறிப்பாக அங்கு பயின்று வரும் இந்திய […]
சவுதி அரேபியா : இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது, குறைந்தது 68 இந்தியர்கள் கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் உயிரிழந்தனர். இதனால் ஒட்டுமொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600 க்கும் அதிகமாக கடந்ததாக சவுதி அரேபியாவில் உள்ள தூதரக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையில் 323 எகிப்தியர்களும் 60 ஜோர்டானியர்களும் அடங்குவர். மேலும், இந்தோனேசியா, ஈரான், செனகல், துனிசியா மற்றும் ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் ஆகிய நாடுகளிலும் உள்ளவர்களும் உயிழந்தது தெரிய வந்துள்ளது. இந்த […]
சவுதி அரேபியா : மெக்காவில் வீசும் வெப்ப அலை காரணமாக உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 1.8 மில்லியன் யாத்ரீகர்கள் ஹஜ் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அவர்களில் 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டிலிருந்து வந்ததாக சவுதி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த திங்களன்று மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் வெப்பநிலை 51.8 டிகிரி செல்சியஸை (125 பாரன்ஹீட்) எட்டியதாக சவுதி தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த கடும் வெப்பத்தை […]
என்விடியா (Nvidia): அமெரிக்கப் பங்குச்சந்தையில் டெக் நிறுவனங்கள் கடந்த திங்கள்கிழமை அன்று புதிய உச்சத்தைத் தொட்டது. இதனால் நேற்றைய (ஜூன்-19) நாளின் வர்த்தகத்தின் முடிவில் உலகின் முதல் 10 நிறுவனங்களின் பட்டியலில் பெரிதளவு மாற்றம் என்பது ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக உலகின் தலைசிறந்த கம்பெனியாக ஆப்பிள் நிறுவனம் இருந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மைக்ரோசாப்ட் & ஆப்பிள் நிறுவனம் இரண்டும் மாறி மாறி முதல் இடம் 2-ஆம் இடம் பிடித்து வந்தனர். இதுவே இந்த […]
ரஷ்யா : சோச்சியில், லிபெட்ஸ்க் நகருக்குச் சென்ற பெண் ஒருவர் ரிவேரா கடற்கரையில் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது காதலனுடன் குளிக்க ரிவேரா கடற்கரைக்கு வந்துள்ளார். அப்போது காதலனுடன் விளையாடி கொண்டு இருந்த நிலையில், திடீரென பெரிய அலையில் சிக்கினார். இருவரும் கையை பிடித்துக்கொண்டு முதலில் கடலுக்குள் சென்ற நிலையில், மெதுவாக கடலுக்குள் சென்றார்கள். அப்போது பெரிய அலை ஒன்று வரும் போது காதலன் காதலியை பத்திரமாக பிடித்துக்கொண்டு அலையை […]
பாகிஸ்தான் : கராச்சியில் சிந்து மாகாணத்தில் உணவு தேடி வயலில் அத்துமீறி நுழைந்த ஒட்டகத்தின் காலை வெட்டிய கொடூரமான சம்பவத்தில் வயலின் உரிமையாளர் மற்றும் அவரது ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. கடந்த வார இறுதியில் சங்கர் மாவட்டத்தின் முண்ட் ஜம்ராவ் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சங்கர் மாவட்டத்தின் முண்ட் ஜம்ராவ் கிராமத்தில் உள்ள ஒரு வயலுக்கு பசியோடு ஒட்டகம் ஒன்று வந்து அங்கு இருந்த உணவுகளை சாப்பிட்டதாக […]
பெல்ஜியம்: கூல் மின்ட் ரக மவுத் வாஷ் தினமும் பயன்படுத்தினால் அவர்களுக்கு புற்றுநோய் வரவழைக்கும் பாக்டீரியா அதிகம் பரவ வாய்ப்பு இருப்பதாக ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. பிரபல நிறுவனத்தின் மவுத் வாஷ்-ஐ தினமும் பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பெல்ஜியம் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெல்ஜியத்தை சேர்ந்த ஆண்ட்வெர்ப் வெப்பமண்டல மருத்துவ நிறுவனத்தை (Institute of Tropical Medicine in Antwerp, Belgium) சேர்ந்த ஆய்வாளர்கள் பிரபல கூல் மின்ட் நிறுவன மவுத் வாஷை சோதனைக்கு உட்படுத்தினர். […]
ரோம் : இத்தாலிக்கும் கிரீஸுக்கும் இடையில் மத்தியதரைக் கடலில் புலம்பெயர்ந்தவர்கள் பயணம் மேற்கொண்ட 2 கப்பல்கள் தெற்கு இத்தாலியில் வெவ்வேறு சம்பவங்களில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு சம்பவத்தில் 64 பேரைக் காணவில்லை, கடலில் இருந்து காப்பாற்றப்பட்ட 11 பேர் தெற்கு இத்தாலியின் ரோசெல்லா அயோனிகாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில் தெற்கு இத்தாலியின் மத்தியதரைக் கடலில் உள்ள பெலகி தீவுகளில் ஒன்றான லம்பேடுசா தீவி விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து புலம்பெயர்ந்தோர் […]
வடகொரியா: ரஷிய அதிபரான வ்லாதிமிர் புடின், 24 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வட கொரியாவுக்கு செல்லவிருக்கிறார். கடந்த 2000ம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக ரஷ்ய அதிபரான புடின் வட கொரியா நாட்டிற்கு பயணப்பட இருக்கிறார். மேலும், பயணத்தில் வடகொரியாவின் அதிபரான கிம் ஜோங் உன் உடன் நேரிடையான பேச்சுவார்த்தைக்கும் புடின் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. மேற்கத்திய நாடுகளின் பெரும் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள இந்த இரு நாடுகளும் (ரஷ்யா-வடகொரியா), நாட்டின் பாதுகாப்புக்காகவும் மற்றும் பொருளாதாரத்துக்காகவும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த […]
அமெரிக்கா : முகமூடி அணிந்த இருபது பேர் அமெரிக்காவில் புனேவைத் தலைமையிடமாகக் கொண்ட நகைக்கடையில் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. கலிபோர்னியாவின் சன்னிவேலில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமாக ‘பிஎன்ஜி ஜூவல்லர்ஸ்’ என்ற நகைக்கடை உள்ளது. அந்த நகைக்கடையில் ஒரே ஒரு பாதுகாவலர் மட்டும் நின்றுகொண்டு கையில் போனை வைத்து கொண்டு கடையை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது கடையை நோட்டமிட்டு இருந்த 20 பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் சுத்தியலுடன் விறு […]
ஈக்வடார் : ஈக்வடாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காணாமல் போயுள்ளனர் என்று ஈக்வடார் அதிகாரிகளின் முதற்கட்ட தகவலை தெரிவித்துள்ளார். குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. எனவே, இந்த பலத்த மழை காரணமாக நிலச்சரிவு, பாறை சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக பல நாடுகள் எச்சரிக்கவும் செய்து இருந்தார்கள். இதனையடுத்து, எல் சால்வடாரில், நாடு […]
சவூதி அரேபியா : கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணம் சென்ற ஜோர்டனைச் சேர்ந்த 14 பேர், ஈரானைச் சேர்ந்த 5 பேர் என 19 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்லாமியர்களின் ஸ்தாபகரான முஹம்மது நபியின் பிறப்பிடமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு முஸ்லிம்கள் மேற்கொள்ளும் வருடாந்திர புனித யாத்திரை தான் ‘ஹஜ்’ ஆகும். இந்த ஆண்டு சுமார் 1.8 மில்லியன் மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவூதி அரேபியா, பாலைவனங்களுடன் கூடிய வெப்பமான […]
எலான் மஸ்க் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும் எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியுள்ளார். அமெரிக்காவின் போர்ட்டரிகோ நாட்டில் தேர்தல் நடந்தபோது, வாக்கு எண்ணிக்கை சரியாக இல்லை எனவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்த சூழலில், எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இதனை சுட்டிகாட்டும் விதமாக ” மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்கவேண்டும். ஏனென்றால், இந்த இயந்திரங்களை […]
பாகிஸ்தான் : பணவசதி இல்லாத பாகிஸ்தானில் பணவீக்கத்தால் விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால், அங்கிருக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஈத் உல் அதா (பக்ரீத்) பண்டிகையை முன்னிட்டு, பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் (HSD) விலையை அந்நாட்டு அரசாங்கம் குறைத்துள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10.20 குறைக்கப்பட்டு ரூ.258.16 ஆகவும், அதிவேக டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.33 என குறைக்கப்பட்டு ரூ.267.89 ஆக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை […]
டொனால்ட் ட்ரம்ப்: இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்றால் வருமான வரி செலுத்துவதில் இருந்து விடுவிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெரும் நோக்கில் குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்டு டிரம்ப் அமெரிக்க மக்கள் மீது சில வாக்குறுதிகளை அளித்து வருகிறார். அதில் வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்கா மக்களை வருமான வரி செலுத்துவதிலிருந்து விடுவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின், […]
சீனா : சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் 80 வயது முதியவர் ஒருவர் 23 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திரு லீ (80) என்ற முதியவர் முதியோர் இல்லத்தில் பணிபுரியும் இளம் பெண்ணான சியாஃபங் (23) மீது காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இருவரும் முதலில் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்த நிலையில், இறுதியில் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து திருமணம் செய்துகொண்டார்கள். காதலித்ததை தொடர்ந்து சியாஃபங் வீட்டில் கல்யாண […]
ஜி7 மாநாடு: ஜி7 அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் நேற்று தொடங்கியது. ஜூன் 13 முதல் 15 வரை நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு இத்தாலிக்கு சென்றடைந்தார். சமீபத்தில், மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். இத்தாலியின் அபுலியா பகுதியில் நடைபெறும் ஜி7 அவுட்ரீச் அமர்வில், இத்தாலிய பிரதமர் மெலோனி தொகுத்து வழங்கும் ‘செயற்கை நுண்ணறிவு, ஆற்றல், […]