இங்கிலாந்து: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர். இங்கிலாந்து நாட்டில் உள்ள மொத்தம் 650 தொகுதிகளும் ஒரே கட்டமாக நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக தற்போதைய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பிரதமர் வேட்பாளராகவும், தொழிலாளர் கட்சி சார்பாக கீர் ஸ்டார்மர் […]
அமெரிக்கா : அமெரிக்காவில் ஜனநாயக மற்றும் குடியரசு ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக தற்போது செயலாற்றி வருகிறார். இவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடியவுள்ளதால், இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பைடனை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்தல் களத்தில் நிற்கிறார். இதனால் அமெரிக்க அதிபர் […]
வைரல் வீடியோ : சமூக வலைத்தளங்களில் அடிக்கடி எதாவது வீடியோக்கள் வைரலாவது என்பது வழக்கமான ஒன்று. அப்படி வைரலாகும் வீடியோக்களில் ஒரு சில வீடியோக்கள் நம்மளை சிரிக்க வைக்கும் வகையிலும், ஒரு சில வீடியோக்கள் அதிர்ச்சியடை வைக்கும் வகையில் இருக்கும். அப்படி தான் தற்போது கடலில் ஒருவர் ஸ்கூட்டரில் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வைரலாகி வரும் இந்த வீடியோவில் அந்த நபர் ஸ்கூட்டருடன் கடற்கரைக்கு சென்றிருப்பதை காணலாம். அவரும் ஹெல்மெட் […]
பாகிஸ்தான் : பாகிஸ்தானில் உள்ள ஒரு இடம் தெரியாத இடத்தில், மாட்டு சந்தையில் ஒரு பாகிஸ்தான் பெண் செய்தியாளர் வியாபாரிகளுடன் கலந்து ஒரு நிகழ்ச்சியில் மாடுகளின் விலைகளை குறித்தும் அதன் வியாபாரத்தை குறித்தும் கலந்துரையாடுவது போல அந்த நிகழ்ச்சி அமைந்திருக்கும். அப்படி பேசி கொண்டிருக்கையில் அங்கிருந்த ஒரு காளை மாடு அந்த பெண் செய்தியாளரை முட்டி தூக்கி எறிந்து விடும். இது சம்மந்தமான வீடியோ காட்சியும் அந்த நிகழ்ச்சி பதிவு செய்யும் கேமராவில் பதிவாகி இருக்கும். அந்த […]
துபாய்: இந்திய பெண்மணியான பல்லவி வெங்கடேஷ் தனது விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார் அங்கு அட்லாண்டிஸ், தி பால்மில் என்ற 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில், பல்லவி வெங்கடேஷ் தனது அறையின் பால்கனியில் அவரது துணிகளை காய வைத்துள்ளார். அதனை வீடியோ எடுத்து அவரது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாக பரவியுள்ளது. அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோவில், பல்லவியின் தாய் கடற்கரை ரிசார்ட்டில் உள்ள அவர்களின் அறையின் பால்கனியில் […]
வைரல் வீடியோ : இன்றயை காலகட்டத்தில் ரீல்ஸ் செய்வதற்காக பலரும் ஆபத்தை உணர்ந்து கொள்ளாமல் சில மோசமான செயல்களில் ஈடுபடுவது உண்டு. இதனால் சிலர் நூலிழையில் உயிர்தப்பித்தும் வருகிறார்கள். அப்படி தான் ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் ரீல்ஸ் செய்ய முயற்சி செய்து நூலிலையில் உயிர்தப்பியுள்ளார். பெண் ஒருவர் தனது நண்பருடன் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் நின்றுகொண்டு ரீல்ஸ் செய்வதற்காக நின்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் ரயில் மெதுவாக வந்து கொண்டு இருந்தது. ரயில் பக்கத்தில் […]
பாகிஸ்தான் : தெற்கு பாகிஸ்தானில் வெப்பநிலை அதிகரித்ததால், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்தது. பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு வெயில் வாட்டி வருகிறது. கடந்த 6 நாள்களில் மட்டும் 568 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கராச்சியில் வெப்பநிலை 40C (104F) க்கு மேல் உயர்ந்ததால், இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. கராச்சி சிவில் மருத்துவமனையில் 267 பேர் வெப்பம் தொடர்பான உடல்நிலை பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கானோர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு […]
சுனாமி எச்சரிக்கை : தென் அமெரிக்க நாடான பெருவில், இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் மையத்தின்படி, ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள், மிகப்பெரிய கட்டடங்கள் குலுங்கியது. இதனால், அச்சமடைந்த மக்கள், வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெருவியன் தலைநகர் லிமாவிற்கு தெற்கே சுமார் 600 கிமீ தொலைவில் உள்ள அட்டிகிபாவிற்கு […]
உலகக்கோப்பை 2024 டி20 : தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அசத்தலாக விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதன் பின் 172 என்ற இலக்கை எடுக்க பேட்டிங் களமிறங்கியது […]
அமெரிக்கா: இந்த ஆண்டின் நவம்பரில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபராக இருக்கும் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்க அரசியல் தேர்தல் களத்தில் முக்கிய அம்சங்களில் ஒன்று தான் தேர்தலில் வேட்பாளராக நிற்பவர்கள் நேருக்கு நேர் விவாதித்து கொள்வதாகும். இது அந்நாட்டு வழக்கமாக நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் நடைபெற இருக்கும் இந்த தேர்தலின் […]
ரஷ்யா: வடக்கு ரஷ்யாவின் கோமியின் குடியரசு பகுதியில் பயணிகள் ஏற்றி சென்ற ரயில் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த சம்பவத்தில் சுமார் 70 பயணிகள் காயமடைந்தனர். இந்த ரயில் வோர்குடா நகரத்திலிருந்து ஆர்க்டிக் வட்டம் வழியாக நாட்டின் தெற்கில் கருங்கடலில் உள்ள நோவோரோசிஸ்க் துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்த வேலையில் கோமி குடியரசில் உள்ள சிறிய நகரமான இன்டா அருகே ரயில் தடம் புரண்டள்ளது. இந்த விபத்தில் ரயிலின் 9 பெட்டிகள் அருகில் இருந்த […]
பாகிஸ்தான் : அப்பாவி மக்களை கேலி செய்வதும் அவர்களை துன்புறுத்துவதும் எப்போதும் நல்ல விஷயம் இல்லை. அப்படி செய்தால் உடனடியாகவே அதற்கு தண்டனை கிடைத்துவிடும். அதற்கு உதாரணமாக தான் இப்போது ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. அது என்னவென்றால், ரயில்வே தண்டவாளத்திற்கு கீழே உள்ள ஏரியில் இளைஞர்கள் சிலர் குளித்து கொண்டு வாகனத்தை கழுவி கொண்டு இருந்தார்கள். அப்போது அந்த நேரத்தில் ரயில் அந்த பகுதியில் வந்ததை கவனித்த இளைஞர்கள் ரயிலில் இருப்பவர்கள் மீது தண்ணீர் தெளித்து […]
ஆஸ்திரேலியா : 30 ஆண்டுகளாக தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் புகைத்த ஒரு மனிதனுக்கு ஒரு அரிதான சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, அதிகப்படியான புகை பழக்கத்தால் அந்த மனிதனின் தொண்டைக்குள் அரிதான முடி வளர்ந்துள்ளது. இதன் காரணமாக பெயர் குறிப்பிடத்தப்படாத ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 2007 ஆம் ஆண்டில் கரடுமுரடான குரல், மூச்சுத் திணறல் மற்றும் நாள்பட்ட இருமல் போன்ற புகார்களை சந்தித்ததால், இது தொடர்பாக மருத்துவரை அணுகியுள்ளார். மருத்துவரிடம் அவர் […]
நெதர்லாந்து : சேர்ந்த நரைன் மெல்கும்ஜான் என்ற பெண் விமானி, இலகுரக விமானம் ஒன்றை எடுத்துக்கொண்டு வானில் பறந்தார். வானில் நன்றாக பறந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென விமானத்தின் மேற்கூரை காற்றில் திறக்கப்பட்டதால் அந்த பெண் மிகவும் குழப்பமடைந்தது அதிர்ச்சியானார். மேற்கூரை திறந்து காற்று வேகமாக வீசியதால் பெண் பயத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தார். பின், வேகமாக வீசிய காற்றில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் சிறிது நேரம் விமானத்தில் பறந்து […]
அமெரிக்கா : வட-மத்திய அமெரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்ட நிலையில், குறைந்தது 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அயோவாவில் ஒருவரும், தெற்கு டகோட்டாவில் ஒருவரும் இறந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், இவர்களுடைய உடல்களை மீட்க முடியவில்லை என மீட்பு துறையினர் தகவலை தெரிவித்துள்ளனர். கிழக்கு நெப்ராஸ்கா மற்றும் தெற்கு டகோட்டாவிலிருந்து அயோவா மற்றும் மினசோட்டா வரையிலான பகுதியில், கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக […]
அனிமல் வீடியோ : சமூக வலைத்தளங்களில் அடிக்கடி விலங்குகள் தொடர்பாக நாம் வேடிக்கையாக பார்க்க கூடிய வீடியோக்கள் வைரலாகி வருவது வழக்கமானது. ஒரு சில வீடியோக்கள் வேடிக்கையாக இருந்தாலும், பரிதாபமாகவும் இருக்கும். அப்படி தான் தற்போது அடர்ந்த காட்டிற்குள் சிங்கம் ஒன்றும் யானை ஒன்றும் சண்டைபோட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வீடியோவில் ” ஒரு யானையை சிங்கம் ஒன்று தும்பிக்கையை பிடித்துக்கொண்டு தாக்க முயற்சி செய்கிறது. ஆனால், யானையின் தோல் மிகவும் கடினமாக இருப்பதால் சிங்கத்தால் அதனை […]
இந்தோனேசியா : ஜிம்மில் பயிற்சிக்காக வந்த இளம் பெண் ஒருவர் டிரெட்மில் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக, கட்டிடத்தின் மூன்றாவது மாடியின் ஜன்னலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 22 வயதான பெண், செவ்வாய்கிழமை, மேற்கு கலிமந்தனில் உள்ள போண்டியானக்கில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, டிரெட்மில்லில் ஓடி கொண்டு இருந்த சமயத்தில் நிலை தடுமாறி பின்னாடி ஜன்னலை நோக்கி மெதுவாக […]
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள மெரினா பே சாண்ட்ஸ் கேசினோ (Marina Bay Sands Casino-MBS Casino) என்ற இடத்தில் கேசினோ மூலம் 4 மில்லியன் டாலர் ஜாக்பாட் மூலம் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி பெற்ற ஆனந்த அதிரிச்சியில் அந்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இதன் காரணமாக சிறுது நேரத்தில் இறந்தார். அந்த கேசினோவுக்கு தினசரி வாடிக்கையாளர் அடையாளம் தெரியாத அந்த நபர், அன்றைய நாளின் அதிக பங்குகள் கொண்ட அவர் விளையாடி இருக்கிறார். அப்போது […]
ஆசிய நாடுகளில் கடும் வெப்பம் வாட்டி வைத்து வரும் நிலையில், சவுதிஅரேபியாவில் உள்ள புனித மெக்காவில் கடும் வெப்ப அலை நிலவி வருகிறது. மெக்காவில் வெப்பநிலை 125 டிகிரி ஃபாரன்ஹீட்டாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், மெக்காவில் ஏற்பட்ட கடும் வெப்ப அலையால் தற்போது வரை உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 1,300 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகமாகும் என அஞ்சப்படுகிறது. அதில், இந்தோனேசியாவைச் சேர்ந்த 165 யாத்ரீகர்களும், இந்தியாவிலிருந்து 98 பேரும், இரண்டு […]
ரஷ்யா : ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் வடக்கு காகசஸ் தாகெஸ்தானில் உள்ள ஒரு ஜெப ஆலயம், இரண்டு ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்கள் மற்றும் ஒரு போலீஸ் நிலையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். தொடர்ச்சியான இந்த பயங்கர தாக்குதல்களில் 15-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு பாதிரியார் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜெப ஆலயம் மற்றும் தேவாலயம் இரண்டும் டெர்பென்ட்டில் அமைந்துள்ளன. இதனை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதில், பொதுமக்கள் உயிரிழப்புகளும் […]