நித்யானந்தாவால் உருவாக்கப்பட்ட கைலாசா நாடு போன்றே, சுயமாக அறிவிக்கப்பட்ட நாடுகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்….
குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நித்யானந்தா, இந்தியாவை விட்டு வெளியேறி 2020 இல் தனது சொந்த நாடான “ஐக்கிய நாடுகளின் கைலாசா” வை உருவாக்கியதாகக் கூறினார். அவர் கைலாசத்தை “பண்டைய அறிவொளி பெற்ற இந்து நாகரிக தேசம்” என்று அழைக்கிறார்.
மொலோசியா குடியரசு: சுவாமி நித்யானந்தாவைப் போலவே, கெவின் பாக், மொலோசியா குடியரசு என்ற சுய-அறிக்கை தேசத்தைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். இது அமெரிக்காவின் நெவாடா அருகே அமைந்துள்ளது. 30 மனிதர்கள் மற்றும் 4 நாய்கள் உட்பட மொத்தம் 34 இனங்கள் இந்த மைக்ரோனேஷன்(MicroNation) எல்லைக்குள் வாழ்கின்றன. மேலும் இது அதன் சொந்த நாணயமான வலோராவையும் கொண்டுள்ளது.
மொலோசியா குடியரசு, 1990, 2006 மற்றும் 2010இல் மற்ற மைக்ரோ நாடுகளுடன் போர் புரிந்து வெற்றியும் பெற்றுள்ளது. மொலோசியா குடியரசு தனது தேசிய கீதத்தை இரண்டு முறை மாற்றியுள்ளது. அதன் கொடி நீலம், வெள்ளை மற்றும் பச்சை என மூவர்ண வடிவமைப்பில் உள்ளது.
லிபர்லாண்ட்: ஏப்ரல் 13, 2015 அன்று, விட் ஜெட்லிகா தனது சொந்த சுதந்திர நாடான லிபர்லாண்டை உருவாக்குவதாக அறிவித்தார். இது குரோஷியாவிற்கும் செர்பியாவிற்கும் இடையில் டானூப் ஆற்றின் கரையில் அமைந்துள்ள, சிகா எனப்படும் சிறிய நிலப்பரப்பு ஆகும். இங்கே சுமார் 2.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
சீலண்ட்: எச்.எம். ஃபோர்ட் ரஃப்ஸ் தனது சொந்த நாடான ‘சீலண்ட்’ ஐ, இங்கிலாந்து கடற்கரையை ஒட்டி உருவாக்கியிருக்கிறார். இது இரண்டாம் உலகப் போரின் போது விமான எதிர்ப்பு தளமாக கட்டப்பட்டது. சர்வதேச கடல் பகுதியில் அமைந்திருந்ததால், 1966ல் பிரிட்டிஷ் கடற்படை இந்த இடத்தை காலி செய்தது. இதற்குப் பிறகு, ஃபோர்ட் ரஃப்ஸ் இதை தனி நாடாக அறிவித்தார்.
இந்த பகுதி கடல் கடற்கரையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மற்றும் இங்கு சுமார் 27 பேர் வாழ்கின்றனர்.
குடியரசுப் பனிப்பாறை: கிரீன்பீஸ்(GreenPeace) சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விலைமதிப்பற்ற நீர் அமைப்புகளைப் பாதுகாக்க, சிலி மற்றும் அர்ஜென்டினா இடையே ஒரு வெற்றுப் பகுதியில், 2014 ஆம் ஆண்டில் குடியரசுப் பனிப்பாறை என்ற தனி நாட்டை உருவாக்கினர். இரு நாடுகளுக்கு இடையே அமைந்திருந்தாலும் யாரும் உரிமை கோர முடியாது என இந்த ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்த நாட்டின் மக்கள் தொகை ஒரு லட்சம் மற்றும் அங்கு வசிக்கும் குடிமக்கள் தங்கள் சொந்த பாஸ்போர்ட்டையும் வைத்திருக்கிறார்கள்.
பொன்டின்ஹா தீவு: பொன்டின்ஹா தீவு மற்றும் மதேரா தீவுக்கூட்டத்தில் உள்ள அதன் கோட்டை ஆகியவை போர்த்துகீசிய அரசின் கீழ் இருந்து வந்தது, 2000 ஆம் ஆண்டில், இது ஒரு பள்ளி ஆசிரியரான ரெனாடோ டி பாரோஸ் என்பவரால் வாங்கப்பட்டு, தனி நாடாக அறிவிக்கப்பட்டது. அதன் உரிமையாளர் தன்னை ஒரு இளவரசர் என்று அறிவித்தார். இங்கு 4 பேர் வசித்து வருகின்றனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…
சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…
சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…