‘Operation Northern Arrows’.. லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல்.!

லெபனான் நாட்டின் தெற்குப் பகுதிக்குள் நுழைந்து தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ளது இஸ்ரேல் ராணுவம்.

Lebanon Isreal War

பெய்ரூட் : லெபனானில் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அடுத்தகட்டமாக தரை வழி தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியானது. அதன்படி, லெபனானின் சில குறிப்பிட்டப் பகுதிகளைக் குறிவைத்து தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது இஸ்ரேல்.

இந்த ராணுவ தாக்குதலுக்கு ‘Operation Northern Arrows’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. லெபனான் நாட்டின் தெற்குப் பகுதிக்குள் இஸ்ரேல் படைகள் நுழைந்தால் சரியான பதிலடி தர, தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத்தலைவர் காஸிம் கூறி உள்ளார்.

காசாவில் ஹமாஸுக்கு எதிராக கடந்த ஓராண்டாக போர் புரிந்து வரும் இஸ்ரேல், அடுத்தகட்டமாக லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளையும், ஏமனில் ஹவுதி படையினரையும் குறிவைத்து போரை விரிவுபடுத்தி உள்ளது.

கடந்த 27-ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைமையகம் மீது, இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்த அமைப்பபின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். அதன் பிறகும் பெய்ரூட் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த 10 நாளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கியமான 6 தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் பல்வேறு ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடுக்க முடிவு செய்தால், அதை எதிர்கொள்ளவும், லெபனானை பாதுகாக்கவும் ஹிஸ்புல்லா போராளிகள் தயாராக உள்ளனர்.

கடந்த சில மாதங்களில் ஹிஸ்புல்லாவின் முன்னணி தளபதிகள் கொல்லப்பட்ட போதும், புதிய தளபதிகளை சார்ந்து தற்போது ஹிஸ்புல்லா இயங்கி வருகிறது. ஏராளமான துணைத்தளபதிகள் உள்ளனர். எந்த நிலையில் உள்ள தளபதி ஒருவரும் காயமடைந்தால், அவருக்கு பதிலாக மாற்று நபர்கள் உள்ளனர். எங்கள் ராணுவ திறன்களை இஸ்ரேலால் சீர்குலைக்க முடியவில்லை.

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 95 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றனர். இஸ்ரேலின் தொடர் தாக்குதல் காரணமாக, லெபனான் மக்கள் தங்கள் இடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை சுமார் 10 லட்சம் பேர் வெளியேறி உள்ளதாக அரசு அந்நாட்டு தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்