ஈரான் – பாகிஸ்தான் எல்லைகள் திறப்பு…தொடங்கியது சரக்கு போக்குவரத்து!

Iran-Pakistan

பாகிஸ்தான் நாட்டின் எல்லை பகுதியில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் அல் அட்ஸ் அமைப்பு ஈரானில் அவ்வப்போது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் கடந்த செவ்வாய் அன்று ஈரான் ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவமும் ஈரானில், பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்க முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியது.

இப்படியான சூழலில், இஸ்லாமாபாத்தின் வெளியுறவு அமைச்சகம் இரு நாட்டு கூட்டு அறிக்கையை வெளியிட்டது, ‘ இரு நாட்டு போர் பதற்ற நிலைமையை தணிக்க மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட இரு நாட்டு ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்காக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்.. 9 பேர் பலி.! விளக்கம் கேட்கும் ஈரான்.!

இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. இரு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த மோதல் சுமூகமானதைத் தொடர்ந்து அனைத்து எல்லை பகுதிகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்,  நாடுகளுக்கிடையே காத்திருந்த லாரி சரக்கு வாகனங்கள் மெதுவாக செல்ல தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்