பறந்துகொண்டிருந்த விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஒருவர் உயிரிழப்பு!
லண்டன் விமான நிலையம் அருகே பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணித்து கொண்டு இருந்த ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை விழுந்துள்ளது.
கென்யா தலைநகர் நைரோ விமான நிலையத்தில் இருந்து லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்த விமானத்தில் கியர் பாக்ஸ் அருகில் ஒருவர் அமர்ந்திருந்தார். லண்டன் விமான நிலையத்தை நெருங்கும் பொழுது விமானம் தரை இறங்குவதற்கு விமானி கியர் பாக்ஸை கீழே இறக்கியுள்ளார். அப்போது மறைவாக இருந்த அவர், விமானத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார், கிளாபம் நகர் ஆபார்ட்டான் சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் விழுந்த அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இது தெடர்பாக கென்ய ஏர்லைன்ஸ் அதிகாரி கூறும் போது , இந்த விபத்தில் விமானத்திற்கு எந்த சேதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், விமானத்தில் 8 மணி நேரம் மறைமுகமாக ஒளிந்து பயணித்து வந்த அந்த நபருக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் தெரிவித்துள்ளார். விழுந்து உயிரிழந்த நபர் குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை.