Moldova [file image]
சென்னை: மால்டோவாவில் நான்கு நாட்களுக்கு முன், புதைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
74 வயது ஒரு மூதாட்டியின் மரணம் தொடர்பான விசாரணையின் போது, இந்த திடுக்கிடும் சம்பவம் அம்பலமானது. இந்த சம்பவம் மே 13 அன்று நடந்ததாக கூறப்படுகிறது, உயிருடன் மீட்கப்பட்ட மூதாட்டி சுயநினைவுடனும் கழுத்தில் காயம் இருந்தது. இந்நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக வடமேற்கு மால்டோவாவில் உள்ள உஸ்டியாவில் மூதாட்டி வீட்டின் அருகே இருந்து 18 வயது இளைஞனை போலீசார் பின்னர் கைது செய்தனர். 74 வயது பெண்மணியின் மரணம் குறித்து இந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற போலீசார், முதியவரின் முனகல் சத்தம் கேட்டு அவரை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், மது போதையில் அந்த முதியவரின் கழுத்தை வெட்டி வீட்டின் பின் புறம் மண்ணில் புதைத்ததாக தெரிய வந்துள்ளது.
கொலை முயற்சி தொடர்பாக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால், இளைஞன் காவலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும்.
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…