இனி ட்விட்டர் பயனர்களும் சம்பாதிக்கலாம் – எலான் மஸ்க்
ட்விட்டர் தனது தளத்தில் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுடன் விளம்பர வருவாயைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கும் என அறிவிப்பு.
Twitter Reply-க்களில் தோன்றும் விளம்பரங்களின் வருவாயை இன்று முதல் ட்விட்டர் படைப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதாவது, இதற்கு தகுதி பெற “Twitter Blue Verified”-ன் சந்தாதாரராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மாதத்திற்கு $8 கட்டணம் வசூலிக்கும் “Twitter Blue Verified” சேவையின் சந்தாதாரர்கள் மட்டுமே வருவாய் பங்கைப் பெற தகுதியுடையவர்கள் என்று அவர் கூறினார். அதன்படி, பயனர்களின் பதில் தொடரிழைகளில் (Twitter Reply) தோன்றும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் பகிரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.