வடகொரியா 4வது முறையாக ஏவுகணை சோதனை!

North Korea

வட கொரியா புதிய போர்க்கப்பல்கள் மற்றும் புதிய வகை விமான எதிர்ப்பு ஏவுகணைகளுடன் கூடிய க்ரூஸ் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.

சர்வதேச அளவில் தங்களை சக்தி வாய்ந்த நாடாக கருத வட கொரியா பல்வேறு ஏவுகணை சோதனைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. இந்த அடிக்கடி ஏவுகணை சோதனைகளை அண்டை நாடான தென்கொரிய கடுமையாக எதிர்த்து வருகிறது.

அந்த வகையில், நேற்று (பிப்ரவரி 2) வட கொரியா மேற்கு கடற்கரையில் இருந்து கப்பல் ஏவுகணைகள் மற்றும் நிலத்திலிருந்து வான் ஏவுகணைகளை சோதித்துள்ளது. இது தொடர்பாக, வட கொரிய அரசு ஊடகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் இதுபோன்ற ஏவுகணை சோதனை செய்வது நான்காவது முறையாகும்.

வட கொரியாவின் மேற்குக் கடற்கரைக்கு அப்பால் பல கப்பல் ஏவுகணைகளை ஏவுவதை பார்த்ததாக தென் கொரியாவின் இராணுவம் இன்று கவலை தெரிவித்துள்ளது. மேலும், இது பற்றி கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) சோதனை செய்யப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை மற்றும் செயல்திறன் பற்றிய விவரங்களைக் குறிப்பிடவில்லை.

போர் அபாயம்: 200 பீரங்கி குண்டுகளை வீசிய வட கொரியா.! தீபகற்பம் பகுதியில் பதற்றம்….

முன்னதாக, கடந்த மாதம் வட கொரியா நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய கப்பல் ஏவுகணையின் இரண்டு சோதனைகளை நடத்தியது. இதனை தொடர்ந்து ஒரு நீண்ட தூர க்ரூஸ் ஏவுகணையின் சோதனைகளையும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்