பசுபிக் பெருங்கடலில் மீண்டும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்ட வட கொரியா.!

Default Image

வடகொரியா நாடானது அண்மையில் பசுபிக் பெருங்கடலில் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. 

சர்வதேச அளவில்  தங்களை சக்தி வாய்ந்த நாடாக கருத வட கொரியா பல்வேறு ஏவுகணை சோதனைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. இந்த ஏவுகணை சோத்தனியானது தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு புகைச்சலை உண்டு செய்துள்ளது என்றே கூறபடுகிறது.

ஏவுகணை சோதனை : வட கொரியா நேற்று (திங்கள்கிழமை) இரண்டு குறுகிய தூர இலக்குகளை தாக்க கூடிய ஏவுகணைகளை நாட்டின் கிழக்கே உள்ள பசுபிக் கடல் பகுதியில் செலுத்தியது. கடந்த 3,4 நாட்களில் வடகொரியா நடத்தும் இரண்டாவது ஏவுகணை சோதனை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் வட கொரியா 70 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது.

தென் கொரியா : வட கொரியாவின் கடற்கரை பகுதியில் இருந்து திங்கள்கிழமை காலை இரண்டு ஏவுகணை ஏவப்பட்டதை தென் கொரியாவின் இராணுவம் கண்டறிந்தது. பின்னர் அந்த ஏவுகணை சோதனையை வட கொரிய அதிகாரப்பூர்வ ஊடகத்தால் உறுதிப்படுத்தியது.

 ஜப்பானின் எல்லை : வடகொரியாவால் ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளும் ஜப்பானின் எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதிக்கு அருகே உள்ள நீரில் தரையிறங்கியதாகவும், இருந்தும், அந்த பகுதியில் உள்ள விமானங்கள் அல்லது கப்பல்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவை தென் கொரியாவின் பெரும்பகுதி வரம்பில் இருப்பதாக தெரிவிக்கும் தூரம் பறந்தன என்றும் ஜப்பான் கூறியது.

பொருளாதாரத் தடை : இந்த அடிக்கடி ஏவுகணை சோதனைகளை அண்டை நாடான தென்கொரிய கடுமையாக எதிர்த்து வருகிறது.  மேலும், இந்த ஏவுகணை சோதனையை ஆதரித்த காரணத்திற்காக அந்நாட்டு ஜனாதிபதி யூன் சுக் யோலின்,  31 தனிநபர்கள் மற்றும் 35 நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளார்.

போட்டி : தென் கொரியாவை விட அமெரிக்க வடகொரியாவின் நடவடிக்கைகளை எதிர்த்து வருகிறது. வடகொரியாவானது, அமெரிக்கா எந்தளவுக்கு ஆயுத பயிற்சியை மேற்கொள்கிறதோ அதனை கருத்தில் கொண்டே வடகொரியாவுக்கு ஆயுத பயிற்சியை மேற்கொள்கிறது என்கிறது உலக வட்டாரம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்