வட கொரியாவின் புதிய சட்டம்!! அணு ஆயுதங்களை பயன்படுத்த இராணுவத்திற்கு முழு அங்கீகாரம்!!
வட கொரிய தலைவர் கிம் ஜாங், தனது நாடு ஒருபோதும் அதன் அணு ஆயுதங்களை கைவிடாது என்று அறிவித்துள்ளார்.
வட கொரிய மக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் நிலை அல்லது நாட்டின் மீது தாக்குதல் ஏற்பட்டால், அணு ஆயுதங்களை “உடனடியாக” பயன்படுத்த இராணுவத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது என்று கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று இச்சட்டத்தை நிறைவேற்றிய பின், மக்கள் சட்டமன்றத்தின் உரையில், “அணு ஆயுதக் கொள்கையை சட்டப்பூர்வமாக்குவதன் மிக முக்கியத்துவம், எங்கள் அணு ஆயுதங்கள் யாரும் மீது பேரம் பேச முடியாது” என்று கிம் கூறினார்.