தென் கொரியாவை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணையை வீசிய வட கொரியா
வடகொரியா தென்கொரியாவின் கடற்கரை பகுதிகளை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியுள்ளது.
தென் கொரியா தனது வருடாந்திர இராணுவ ஒத்திகையை முடித்துக் கொண்டிருக்கும் போது வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை வீசிய சம்பம் நிகழ்ந்துள்ளது.
உலக நாடுகள் எல்லாம் ஒரு பக்கம் நின்றால் , வடகொரியா மட்டும் வித்தியாசமான ஏதாவது செய்து , எப்போதும் செய்தியாவது அந்நாட்டின் வாடிக்கையாகிவிட்டது. அது கொரோனா முதல் ஏவுகணை பரிசோதனை வரை தொடர்கிறது.
தொடர்ந்து வடகொரியாவின் இதுபோன்ற செயல்களை ஐநா அமைப்பு கண்டணங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளது. அதையெல்லாம் பொருட்படுத்தாத வடகொரியா இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து செய்து வருகிறது.
ஏவுகணை வடகொரியாவின் கிழக்கு கடற்பகுதியை நோக்கி பறந்ததாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.