பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி, எச்சரிக்கை விடுத்த வடகொரியா.!
வடகொரியா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது, இதில் ஒன்று மத்திய மற்றும் வடக்கு ஜப்பானின் சில பகுதிகளில் விழுந்தது.
வட கொரியா குறைந்தபட்சம் ஒரேநாளில் 23 ஏவுகணைகளை ஏவிஇருக்கிறது. இதனால் மத்திய ஜப்பானில் உள்ள மியாகி, யமகட்டா மற்றும் நிகாட்டா மாகாணங்களில் வசிப்பவர்கள் வீட்டுக்குள்ளேயே தஞ்சம் அடையும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ஏவுகணை முதன்முதலில் ஏவப்பட்ட சுமார் 25 நிமிடங்களுக்குப் பிறகு, அது விழுந்துவிட்டதாக ஜப்பானின் கடலோர காவல்படை கூறியது. மேலும் இது பசிபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு கிழக்கே 1,100 கிலோமீட்டர் (680 மைல்) தொலைவில் தரையிறங்கியது.
நேற்று வடகொரியா 10 ஏவுகணைகளை ஏவிய பிறகு தென் கொரியாவும் பதிலுக்கு 3 ஏவுகணைகளை ஏவியது. பின்னர் இதற்கு பதிலளிக்கும் விதமாக வடகொரியா இந்த ஏவுகணைகளை ஏவி, எச்சரிக்கை விடுத்துள்ளது.