North Korea: வட கொரியா நாட்டில் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்க்க அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகின் மர்மமான ஒரு நாடாக வட கொரியா விளங்குகிறது. அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து அதிகம் வெளியில் தெரிவதில்லை. அந்நாட்டின் அரசாங்க ஊடகம் செய்தி வெளியிட்டால் மட்டுமே அந்நாட்டின் நடப்பது குறித்த தகவல்கள் வெளிவரும்.
அந்த வகையில் வட கொரியாவில் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் நாய் இறைச்சி மற்றும் ரோமத்திற்காக நாய்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் தலைநகரான பியோங்யாங்கின் வடக்கே அமைந்துள்ள ஒரு மாகாணத்தின் ஆதாரத்தின்படி, கொரியாவின் சோசலிஸ்ட் பெண்கள் ஒன்றியம் மூலம் இந்த தடையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியா மற்றும் தென் கொரியா என இரு நாடுகளிலும் நாய் இறைச்சி உண்ணப்படுகிறது. ஆனால், தென் கொரியா நாட்டில் அது சர்ச்சையாக மாறியதால், அதன் உற்பத்தியை தடை செய்யும் சட்டம் சில மாதங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டது, வட கொரியாவில் நாய் இறைச்சி சூப் Dangogiguk என்ற பெயரில் வெளிநாட்டு பயணிகளுக்கு அவ்வபோது வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
சென்னை : வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து…