Categories: உலகம்

கென்யாவில் நிற்காத மழை! அணை உடைந்து 50 பேர் பலியான சோகம்!!

Published by
அகில் R

Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.

கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து வாங்குகிறது இதன் காரணமாக கென்யாவின் தலைநகரமான நைரோபி நகர் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. நைரோபியில் உள்ள ஒரு ‘மை மஹியூ’ கிராமத்திற்கு அடுத்துள்ள ஒரு டவுனில் அணை உடைந்து இந்த வெள்ளமானது ஏற்பட்டுள்ளது.

மார்ச் மாதம் முதல் நிற்காமல் பெய்த கனமழையால் கென்யாவின் பழமையான அணையான ‘கிஜாப்’ அணை சேதமடைந்தது. இதன் விளைவால் அணையின் தடுப்பு சுவர் உடைந்து வெள்ளம் நிற்காமல் கரைபுரண்டு ஓடி அருகில் உள்ள கிராமங்களில் இருக்கும் வீடுகளுக்குள் புகுந்தது. மக்கள் சரியான நேரத்தில் தங்களது உயிர்களை காப்பற்றி கொள்ள மேடான இடம் நோக்கி விரைந்தனர்.

இருப்பினும், அங்கிருந்த வீடுகள் எல்லாம் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. மேலும், குடியிருப்புகள் எல்லாம் மூழ்கி போனதால் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மேலும், ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால் அங்குள்ள இயல்பு நிலையும் தலைகீழாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து ஏற்பட்ட இந்த வெள்ளப்பாதிப்பால் நேற்றைய நாளில் 40 பேர் பலியானதாக கூறிய நிலையில் இன்றைய நாளில் கிட்டதட்ட 50 அல்லது 50-க்கும் மேற்பட்டோர்  பலியாகி இருக்கலாம் எனும் தகவல்கள் வெளி வந்துளளது. இதன் காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளனர். மேலும், மாயமான பலரையும் அங்குள்ள மீட்பு பணி குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருவதோடு கனமழையின் தாக்கம் தாங்கமுடியாமல் உலகநாடுகளிடம் உதவி கேட்டு வருகின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்..! மொறு மொறு கல்கல் செய்வது எப்படி?. வாங்க தெரிஞ்சுக்கலாம்.!கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்..! மொறு மொறு கல்கல் செய்வது எப்படி?. வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்..! மொறு மொறு கல்கல் செய்வது எப்படி?. வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை -50…

3 minutes ago
பிரேசில் நகரில் விழுந்து நொறுங்கிய விமானம்: 10 பேர் உயிரிழப்பு!பிரேசில் நகரில் விழுந்து நொறுங்கிய விமானம்: 10 பேர் உயிரிழப்பு!

பிரேசில் நகரில் விழுந்து நொறுங்கிய விமானம்: 10 பேர் உயிரிழப்பு!

பிரேசில் : தெற்கு பிரேசிலின் கிராமடோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் விபத்தானத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில்,…

4 minutes ago
2026 தேர்தலில் திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்க திட்டமா? திருமாவளவன் பதில்2026 தேர்தலில் திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்க திட்டமா? திருமாவளவன் பதில்

2026 தேர்தலில் திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்க திட்டமா? திருமாவளவன் பதில்

கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற…

24 minutes ago
தேர்தல் விதிகள் திருத்தம் : பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் எதிர்க்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் கண்டனம்!தேர்தல் விதிகள் திருத்தம் : பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் எதிர்க்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தேர்தல் விதிகள் திருத்தம் : பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் எதிர்க்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சென்னை : தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இனி பொதுமக்கள் பார்வையிட முடியாதபடி, தேர்தல் விதிகளை…

41 minutes ago
அல்லு அர்ஜுன் வீடு தாக்கப்பட்ட விவகாரம்: 6 பேருக்கு ஜாமீன்.. பின்னணியில் ரேவந்த் ரெட்டி?அல்லு அர்ஜுன் வீடு தாக்கப்பட்ட விவகாரம்: 6 பேருக்கு ஜாமீன்.. பின்னணியில் ரேவந்த் ரெட்டி?

அல்லு அர்ஜுன் வீடு தாக்கப்பட்ட விவகாரம்: 6 பேருக்கு ஜாமீன்.. பின்னணியில் ரேவந்த் ரெட்டி?

தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன்…

2 hours ago
சிறப்பு நீட் கலந்தாய்வு., ‘கெடு’ விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! சிறப்பு நீட் கலந்தாய்வு., ‘கெடு’ விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! 

சிறப்பு நீட் கலந்தாய்வு., ‘கெடு’ விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி : நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நீட் (NEET) எனும் பொது நுழைவு தேர்வு…

2 hours ago