கென்யாவில் நிற்காத மழை! அணை உடைந்து 50 பேர் பலியான சோகம்!!

Kenya Flood

Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.

கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து வாங்குகிறது இதன் காரணமாக கென்யாவின் தலைநகரமான நைரோபி நகர் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. நைரோபியில் உள்ள ஒரு ‘மை மஹியூ’ கிராமத்திற்கு அடுத்துள்ள ஒரு டவுனில் அணை உடைந்து இந்த வெள்ளமானது ஏற்பட்டுள்ளது.

மார்ச் மாதம் முதல் நிற்காமல் பெய்த கனமழையால் கென்யாவின் பழமையான அணையான ‘கிஜாப்’ அணை சேதமடைந்தது. இதன் விளைவால் அணையின் தடுப்பு சுவர் உடைந்து வெள்ளம் நிற்காமல் கரைபுரண்டு ஓடி அருகில் உள்ள கிராமங்களில் இருக்கும் வீடுகளுக்குள் புகுந்தது. மக்கள் சரியான நேரத்தில் தங்களது உயிர்களை காப்பற்றி கொள்ள மேடான இடம் நோக்கி விரைந்தனர்.

இருப்பினும், அங்கிருந்த வீடுகள் எல்லாம் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. மேலும், குடியிருப்புகள் எல்லாம் மூழ்கி போனதால் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மேலும், ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால் அங்குள்ள இயல்பு நிலையும் தலைகீழாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து ஏற்பட்ட இந்த வெள்ளப்பாதிப்பால் நேற்றைய நாளில் 40 பேர் பலியானதாக கூறிய நிலையில் இன்றைய நாளில் கிட்டதட்ட 50 அல்லது 50-க்கும் மேற்பட்டோர்  பலியாகி இருக்கலாம் எனும் தகவல்கள் வெளி வந்துளளது. இதன் காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளனர். மேலும், மாயமான பலரையும் அங்குள்ள மீட்பு பணி குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருவதோடு கனமழையின் தாக்கம் தாங்கமுடியாமல் உலகநாடுகளிடம் உதவி கேட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்