Fact Check: நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் காலமானாரா? உண்மை தகவல் இதோ!!
நோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் நலமுடன் உள்ளார், பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என மகள் வேண்டுகோள்.
இந்திய பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் காலமானார் என்று நேற்று பொருளாதார துறைக்கான நோபல் பரிசு பெற்ற கிளாடியா கோல்டின் செய்தி வெளியிட்டு இருந்தார். ‘
இது குறித்து கிளாடியா கோல்டின் தனது X தள பக்கத்தில், “எனது அன்பான பேராசிரியர் அமர்த்தியா சென் சில நிமிடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார், வார்த்தைகள் இல்லை” என்று குறிப்பிட்டுருந்தார்.
கிளாடியா கோல்டின் நேற்றைய தினம் 2023-24ம் ஆண்டு பொருளாதார துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டது.
தற்போது, இந்த செய்தி பொய் என்று மகள் நந்தனா சென் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவர் தனது X தள பக்கத்தில், நண்பர்களே, உங்கள் அக்கறைக்கு நன்றி இணையத்தில் பரவும் இந்த வதந்தி பொய்யான செய்தி. அப்பா நன்றாக இருக்கிறார். கேம்பிரிட்ஜில் குடும்பத்துடன் ஒரு அற்புதமான நாளை நாங்கள் ஒன்றாகக் கழித்தோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அமர்த்தியா சென்
கடந்த 1933ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்திநிகேதனில் பிறந்த அமர்த்தியா சென், பொருளாதாரத்திற்கான பங்களிப்பிற்காக 1998 இல் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசைப் பெற்று கொண்டார். மேலும் 1999 -ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதும் அமர்த்தியா சென்னுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.