Image Source:X/@NobelPrize]
நடப்பாண்டில் வேதியியல் துறையில் சாதித்தவர்களுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் புள்ளிகள் தொடர்பான ஆய்வுக்காக மௌங்கி பவெண்டி, லூயிஸ் ப்ரூஸ், அலெக்ஸி எகிமோவ் ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிப்பதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதித்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பாண்டுக்கான நோபல் பரிசு நேற்று முன் தினம் முதல் ஒவ்வொரு துறைகளில் சிறந்து விளங்கிய ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில், நேற்று முன்தினம் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பு mRNAவை கண்டறிந்த ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ட்ரே வீஸ்மேன் ஆகிய மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று இயற்பியல் பிரிவுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டன. அதன்படி, அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்களின் உலகத்தை ஆராய்வதற்கான புதிய கருவிகளை கண்டறிந்ததற்காக இயற்பியல் ஆராய்ச்சியாளர்கள் ஆஸ்பெக்ட், ஜான் எஃப். கிளாசர் மற்றும் அன்டன் ஜீலிங்கர் ஆகிய 3 பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று நடப்பாண்டில் வேதியியல் துறையில் சாதித்தவர்களுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும், 2023-ம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதன்படி, குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக மௌங்கி பவெண்டி, லூயிஸ் ப்ரூஸ், அலெக்ஸி எகிமோவ் ஆகியோருக்கு நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேதியியலில் நோபல் பரிசு பெற்றவர்கள் மூன்று பேரும் நானோ உலகத்தை ஆராய்வதில் முன்னோடிகளாக இருந்துள்ளனர் என்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…