உலக அளவில் மருத்துவத்துறை, இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி , பொருளாதரம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் சிறந்து விளங்கி, சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு நோபல் பரிசு ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். அவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சுவீடன் நாட்டு பணம் வழங்கப்படும். ஆண்டுதோறும் வழங்கப்படும் நோபல் பரிசு குறித்த அறிவிப்பு இந்தாண்டும் அறிவிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 2ஆம் தேதி முதல் நோபல் பரிசு மருத்துவத்துறையில் இருந்து ஆரம்பித்து, தினம் ஒரு துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வந்தது. இன்று 2023-24ம் ஆண்டு பொருளாதார துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலார்கள் மத்தியில் பெண் தொழிலார்களின் முக்கியத்துவத்தின் புரிதலை மேம்படுத்தியதற்காக அமெரிக்காவை சேர்ந்த கிளாடியா கோல்டினுக்கு பொருளாதார துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 1946 ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த கோல்டின் கேம்பிரிட்ஜில், உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.
அக்டோபர் 2ஆம் தேதி திங்களன்று மருத்துவத்துறை சார்பில் நோபல் பரிசானது ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ட்ரே வீஸ்மேன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 3 செவ்வாயன்று இயற்பியல் துறையில் ஆராய்ச்சியாளர்களான ஆஸ்பெக்ட், ஜான் எஃப். கிளாசர் மற்றும் அன்டன் ஜீலிங்கர் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் 4ஆம் தேதி புதன் அன்று வேதியியல் துறையில் சிறந்து விளங்கிய ஆராய்ச்சியாளர்கள் மௌங்கி பவெண்டி, லூயிஸ் ப்ரூஸ், அலெக்ஸி எகிமோவ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அக்டோபர் 5 வியாழன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு நோர்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸுக்கு அறிவிக்கப்பட்டது.
அடுத்ததாக அக்டோபர் 6ஆம் தேதி அமைதிக்கான நோபல் பரிசு ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காக நர்கேஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் அவரின் நினைவாக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு , பரிசுத்தொகை அறிவிக்கப்படுகிறது. இந்த பரிசு தொகை மற்றும் விருது வழங்கும் விழாவானது நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறும் . அதே போல வரும் டிசம்பர் 10ஆம் தேதி விழா நடைபெற உள்ளது. நோபலின் விருப்பத்தின் பெயரில் அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வைத்து வழங்கப்படுகிறது. மற்ற பரிசுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வைத்து நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…