பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் தண்ணீர், மின்சாரம் கிடையாது – இஸ்ரேல் அறிவிப்பு!
இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இஸ்ரேல் காசா பகுதி மீது பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை இஸ்ரேல் – பாலஸ்தீனியர்கள் என இரு நாட்டை சேர்ந்த சுமார் 2 ஆயிரதிற்க்கும் மேற்பட்டோர் கூறப்படுகிறது.
தற்போது, காசாவை தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில், காசா நகரில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. காசா நகரில் லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாகவும் மின்சாரம் இல்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
அந்த வகையில், இஸ்ரேலை சேர்ந்த ராணுவத்தினர், முதியவர்கள், குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதியாக பிடித்துவைத்துள்ளனர். இந்நிலையில், ஹமாஸ் பிடியில் சிக்கியிருக்கும் பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை, காசா நகரத்திற்கு மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருள் எதுவும் வழங்கப்படாது என்றும் இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இஸ்ரேல் – ஹமாஸ் குழு இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு அழைப்பு விடுத்துள்ளது. காசா நகரில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும், பாலஸ்தீன மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை சர்வதேச நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
State Of Palestine: போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு அழைப்பு!
இதற்கிடையில், இஸ்ரேல் படையினர் காசா பகுதியில் தொடர் தாக்குதலில் ஈடுப்பட்டு வருவதால், அங்கிருந்து பாலஸ்தீனிய மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை, 3.4 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு எல்லைப்பகுதியில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐநா கூறியுள்ளது.
மீண்டும் அக்டோபர் 6., ஹமாஸ் தாக்குதல்..! அமெரிக்க ஆதரவு.! இஸ்ரேல் பின்னணி நிகழ்வுகள்…