தாடி இல்லனா… வேலை இல்ல..! ஆப்கானிஸ்தானில் அதிரடி உத்தரவு..!
ஆப்கானிஸ்தான் அரசு பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக தாடி வைக்கவேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவு.
ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் தங்கள் வசம் கைப்பற்றினர். இந்நிலையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது முதல் அங்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு கல்வி, வேலை போன்றவற்றால் என தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தான் அரசு பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக தாடி வைக்கவேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது தாடியை சேவ் செய்யக்கூடாது என்றும், நீண்ட தளர்வான மேலாடை மற்றும் கால் சட்டை தொப்பி, தலைப்பாகை ஆகியவற்றை கொண்டுள்ள ஆடைகளை அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆடை கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல் இருந்தாலோ அல்லது ஆண் ஊழியர்கள் தாடி வைக்கவில்லை என்றாலோ உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவர் என்றும் எச்சரித்துள்ளனர்.