தேடப்பட்டு வந்த சர்வதேச பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக்கொலை.!
காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பார்சிங் புரா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் நிஜ்ஜார். 46 வயதான இவர், காலிஸ்தான் எனும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தார், அந்த பாயங்கரவாத அமைப்புக்கு உள்ளூரில் உறுப்பினர்களை சேர்ப்பது, அமைப்பை விரிவுபடுவது, நிதி திரட்டுவது என தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக அரசங்கமும், தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) வழக்கு பதிவு செய்து இருந்தது.
NIA இன் குறிப்பிட்டுள்ள புகாரின் படி, ‘ நிஜ்ஜார் தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்றும், நாட்டிற்கு எதிரேக்கா கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்த போது, அவரிடம் அப்போதைய பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தேடப்படும் நபர்கள் பற்றிய பட்டியலை கொடுத்தார். அதில், நிஜ்ஜார் பெயரும் சேர்க்கப்பட்டு இருந்தது.
இப்படி சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக செயல்பட்டு வந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாரா சாஹிப் வளாகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அடையாளம் தெரியாத இரு இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.