சிப்ரஸின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ், அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்று நடந்த சிப்ரஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ், இரண்டாவது மற்றும் இறுதி சுற்று வாக்குப்பதிவுக்குப் பிறகு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆண்ட்ரியாஸ் மவ்ரோயானிஸ்-ஐ தோற்கடித்து 51.9% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆண்ட்ரியாஸ் மவ்ரோயானிஸ் 48.1% வாக்குகளைப் பெற்றிருந்தார்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஜனாதிபதி தேர்தலில் ஆளும் DISY கட்சியின் நிகோஸ் அனஸ்டாசியாட்ஸ், 2013 முதல் ஆட்சியில் இருந்து வருகிறார், 2018 இல் அவர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டப்படி, அவர் மூன்றாவது முறையாக பதவியேற்க முடியாது. அதன்பிறகு தற்போது நடந்த அதிபர் தேர்தலில் 49 வயதான கிறிஸ்டோடூலிட்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிறிஸ்டோடூலிட்ஸ் 2022 ஆம் ஆண்டு வரை சிப்ரஸின் வெளியுறவு அமைச்சராக இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…