அடுத்த அடி! ஹமாஸ் சுரங்கபாதைகளை குறிவைத்து தகர்த்தும் இஸ்ரேல்!
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான யுத்தத்தில் ஹமாஸ் அமைப்பின் சுரங்கபாதைகளை குறித்து வைத்து இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் அமைப்பின் மிகப்பெரிய பலமாக சுரங்கப்பாதை கட்டமைப்பு கருதப்படுகிறது. இதனால், சுரங்கபாதைகளை தகர்த்து ஹம்ஸா அமைப்பை பலவீனப்படுத்த இஸ்ரேல் வியூகம் வகுத்து செயற்படுத்தி வருகிறது.
இஸ்ரேலுக்கு தெரியாமல் படைகள், ஆயுதங்களை கொண்டு செல்ல சுரங்கபாதைகளை ஹமாஸ் அமைப்பினர் அமைத்திருந்தனர். இந்த சூழலில், ஹமாஸ் அமைப்பின் சுரங்கபாதைகளை குறித்து வைத்து இஸ்ரேல் விமானங்கள் தகுதி நடத்தி தகர்த்து வருகிறது. ஏற்கனவே, ஹமாஸ் படையினர் பதுங்கு குழிகளை குறிவைத்து தாக்கி வந்த நிலையில், தற்போது சுரங்கபாதைகளை தகர்த்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல், ஹமாஸின் ஆயுதக்கிடங்குகள், முக்கிய தலைவர்கள் தங்குமிடங்களையும் இஸ்ரேல் குறிவைத்து தாக்கல் நடத்தி வருகிறது. இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான யுத்தம் இன்று 6வது நாளாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்ந்து நடந்து வருவதால், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்த போரில் பெற்றோர்களை இழந்து குழந்தைகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நடுத்தெருவில் கண்ணீரும் கம்பலையுமாக குழந்தைகள் கதறும் நெஞ்சை உருக்கம் காட்சி தென்படுகிறது. இதனிடையே, ஹமாஸ் அமைப்பினரை நசுக்கி ஒழிக்கப்போவதாக இஸ்ரேல் பிரதமர் ஆவேசமாக கூறியுள்ளார். இஸ்ரேல் ராணுவத்தினர் தலைகளை ஹமாஸ் அமைப்பினர் கொய்ததாக அந்நாட்டு பிரதமர் குற்றசாட்டியுள்ளார்.
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான யுத்தத்தை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களை அனுப்பியுள்ளது. ஹமாஸ் படையினர் செயலுக்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக ஹமாஸ் அமைப்பினர் போர் பிரகடனம் எடுத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு இஸ்ரேல் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது இந்த தாக்குதலில் பெண்கள் குழைந்தைகள் என பலர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.