இனி இந்த நாட்டில் சிகெரெட் கிடைப்பது கடினம்.! வெளியான புதிய கடும் கட்டுப்பாடுகள்.!
2027 ஆம் ஆண்டு முதல் 14 வயதிற்கு கிழே உள்ளவர்கள் சிகெரெட் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடை 2073 வரை அவர்களுக்கு தொடரும் என கூறப்படுகிறது.
நியூசிலாந்தில் சிகெரெட் பிடிப்பவர்களுக்கு எதிராக பல்வேறு நடைவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அதிலும், குறிப்பாக சிகெரெட் பிடிப்பவர்களை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வரவுள்ளது.
அந்நாட்டில் ஏற்கனவே 18 வயதிற்கு உட்பட்டவர்கள் சிகெரட் பிடிப்பதை தடை செய்கிறது. அதன் மூலம் வெறும் 5 % மட்டுமே வருடத்திற்கு சிகெரெட் பிடிப்பவர்களை குறைக்க முடியும் என அந்நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதனால், புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாட்டு சுகாதார அமைப்பு முடிவெடுத்துள்ளது. அதன்படி, 2027ஆம் ஆண்டு முதல் 14 வயதிற்கு உட்பட்டர்களுக்கு சிகெரெட் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் 2073 வரையில் அவர்களால் சிகெரெட் வாங்க முடியாது. அவர்களது 61வது வயதில் தான் அவர்களால் சிகெரெட் வாங்க முடியும்.
சிகெரெட் பழக்கத்திற்கு அடிமையாகிறவர்கள் 18 வயதிற்கு கீழே வெறும் 4 % சதவீதம் என்றால், 25 வயதிற்குள் அதற்கு அடிமை ஆகிரவர்கள் 96 % ஆகவே, மேற்கண்ட கட்டுப்பாடுகளை 2027 முதல் செயல்படுத்த நியூசிலாந்து சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளதாம்.