கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கிய நியூசிலாந்து அரசு!

Default Image

பல நாடுகளில் கருக்கலைப்பை என்பது ஒரு பெண்ணின் உரிமையாக இருந்து வந்த நிலையில், நியூசிலாந்து நாட்டில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இதனையடுத்து அந்நாட்டுபெண்கள் உடல் ரீதியிலோ அல்லது மனரீதியிலோ ஆபத்து இருக்கும் நிலையில், இரண்டு மருத்துவர்கள் பரிசோதித்த பின்னர், அவர்கள் அனுமதியுடன் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

நியூசிலாந்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்ணியவாதிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து கருப்பைசட்டபூர்வமாக்கும் மசோதாஅந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தசட்டம்அமலுக்கு வரும்நிலையில் , கர்ப்பம் தரித்த பெண்கள் 20 வாரத்திற்குள் மருத்துவரின் உதவியோடு, கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். இதற்காக அவர்கள் எந்த சட்ட விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.

இதுகுறித்து, நியூசிலாந்தின் நிதித்துறை மந்திரி ஆண்ட்ரூ லிட்டில் கூறுகையில், உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பாதுகாப்பான கருக்கலைப்பு அவசியமாகிறது. ஒரு பெண்ணுக்கு தனது உடலில் என்ன நடக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை உள்ளதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்