2025 புத்தாண்டு கொண்டாட்டம் : உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது!

நியூசிலாந்தில் வானவேடிக்கை கொண்டாட்டங்களுக்கு மத்தியில் 2025 புத்தாண்டு பிறந்தது. கேக் வெட்டி, ஆட்டம் பாட்டத்துடன் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

NewYear2025

நியூசிலாந்து : உலகத்தில் உள்ள அணைத்து மக்களுக்கும் ஆங்கில புத்தாண்டை கொண்டாட தயாராகி உள்ளனர். நம்மூரில் இன்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.  புத்தாண்டு பிறந்த சரியாக 12 மணிக்கு நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில், சின்னமான ஸ்கை டவரில் வாணவெடிகள் வெடித்து மக்கள் கீழே கொண்டாடினார்கள்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரமிக்க வைக்கும் வானவேடிக்கை காட்சி காண்போரை திகைக்க வைத்தது. ஆயிரக் கணக்கானோர் கூடி, ஆரவாரம் செய்தும் பாடியும் கொண்டாடினார்கள்.

நியூசிலாந்தை தொடர்ந்து அடுத்ததாக, ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்கள் புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட மக்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்