வாட்ஸ்ஆப் குரூப் காலில் 32 பேர் வரை பேசுவதற்கான புதிய அப்டேட்டை கொண்டு வருகிறது, மெட்டா நிறுவனம்.
உலகில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலியானது, தன் பயனர்களுக்காக அவ்வப்போது பல புதிய அப்டேட்களைக் கொண்டுவருகிறது. இதன்படி மெட்டாவின் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க், வாட்ஸ்ஆப் குரூப் காலில் இனி 32 பேர் வரை பேசமுடியும் என்று ஒரு புதிய அப்டேட்டைக் கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளார்.
வரும்காலங்களில் வீடியோ காலிலும் 32 பேர் வரை இணைப்பதற்கான வேலைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று மார்க் ஸுக்கர்பேர்க் மேலும் தெரிவித்தார்.
இதுவரை உள்ள வாட்ஸ்ஆப் குரூப் காலில் 8 பேர் வரை தான் பேசமுடியும். ஆனால் இனி 32 பேர் பேசலாம் என்று அறிவித்துள்ளது, மேலும் குரூப் காலில், தொடர்பில்(Contact List) இல்லாத புதிய நபரையும் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
இந்த புதிய அப்டேட் ஆனது ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (IOS) என இரு பயனர்களுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…