ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவையடுத்து புதிய அதிபர் தேர்வு…!
61-வயதான ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் 3-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது அதிபரான ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தனது 73 வயதில் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பல நாட்டு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 61-வயதான ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் 3-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.