நியூ ஆர்லியன்ஸ் டிரக் தாக்குதல் : ஓட்டுநருக்கு ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு!
அமெரிக்காவில் புத்தாண்டு அன்று லூசியானா டிரக் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா : நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக போர்பன் ஸ்ட்ரீட் பகுதியில் மக்கள் ஆட்டம் பட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி கொண்டு இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கும் வகையில், வேண்டுமென்றே பிக்கப் டிரக்கை ஒரு நபர் வேகமாக அந்த பகுதியில் ஒட்டி கொண்டு அங்கிருந்தவர்கள் மீது மோதினார்.
கூட்டத்துக்குள் காரை மோதவிட்டு அதில் இருந்து இறங்கி மர்ம நபர், மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை சம்பவ நடந்த இடத்தில் நேரில் பார்த்த நபர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாக அந்நாட்டு செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ட்ரக் வைத்து அந்த நபர் நடத்திய இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 15- பேர் உயிரிழந்ததாகவும்,கிட்டத்தட்ட 30 பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளது.
இச்சம்பவம் பயங்கரவாதச் செயலா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், இது பயங்கரவாத தாக்குதல் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட ட்ரக் ஓட்டுநர் ஷம்சுத்-தின் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, சம்சத் தின் ஜபார் என்பவர் அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் என்பதும், ஆப்கானிஸ்தானில் ராணுவப் பணியில் இருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் புதன்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய போது பேசுக்ககையில், இது போன்ற சம்பவங்கள் “வெறுக்கத்தக்கது” நானும் உங்களை போல வருத்தம் அடைகிறேன். எங்கள் தேசம் இந்த சம்பவத்திற்கு வருந்துகிறது. நீங்கள் குணமாகும் வரை நாங்கள் உங்களுடன் நிற்கப் போகிறோம். இந்த சம்பவத்தில் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்” என்று மேரிலாந்தில் உள்ள கேம்ப் டேவிட்டில் பிடன் கூறினார்.