விளாடிமிர் புதினின் மோசமான உடல்நலம் குறித்த வெளியான புதிய தகவல்.!

Default Image

புற்றுநோய்க்கு எதிராக சிகிச்சை பெறும் விளாடிமிர் புதினின் உடல்நலம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

விளாடிமிர் புதினின் உடல்நலம் மீது, எப்போதும் உலகம் முழுவதும் ஆர்வமாக உள்ளது, உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா இந்த வருடம் பிப்ரவரி மாதம் போர் ஆரம்பித்து, உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து அவரது  உடல்நலம் குறித்து உலகம் கூடுதல் கவனம் செலுத்திவருகிறது.

புற்றுநோய்க்கு எதிராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மேற்கத்திய சிகிச்சை பெற்று வருவதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய வரலாற்றாசிரியரும் அரசியல் ஆய்வாளருமான வலேரி சோலோவி, கூறிய தகவலின்படி, 70 வயதான புதின் புற்றுநோயின் பரவலைக் குறைக்க மேற்கு நாடுகளில் தயாரிக்கப்பட்ட மருந்துகளால் சிகிச்சை பெற்று தான் உயிருடன் இருப்பதாக கூறினார்.

புதின், ரஷ்யாவில் கூட இல்லாத சில மேம்பட்ட சிகிச்சைகளைப் பெற்று வருகிறார். மேலும் அவருக்கு ஆரம்ப நிலை பார்கின்சன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது தற்போது முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. அதிநவீன சிகிச்சை இருந்தபோதிலும், எதிர்காலத்தில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள், நம்பிக்கையுடன் இல்லை என்று சோலோவி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்