இஸ்ரேல் பிரதமர் வீட்டின் தோட்டத்தில் குண்டு வீச்சு.. பதுங்கு குழிக்குள் நெதன்யாகு?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் அருகே குண்டு வீச்சு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Prime Minister's house bombed

இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான  சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு இது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும், விசாரித்து வருவதாகவும் இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானத்தில் இருந்து வேகமாக வந்த குண்டுகள் தோட்டத்தில் விழுந்ததால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று பாதுகாப்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சம்பவத்தின் போது, அந்த நேரத்தில் நெதன்யாகுவோ அல்லது அவரது குடும்பத்தினரோ வீட்டில் இருக்கவில்லை என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இன்று காலை ஒரு பதிவில் தெரிவித்தார்.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த சம்பவம் அனைத்து சிவப்புக் கோடுகளையும் கடந்துவிட்டது.” ஈரான் மற்றும் அவரைக் கொல்ல முயற்சிக்கும் நபர்களிடம் இருந்து வரும் அச்சுறுத்தலுக்கு உள்ளான இஸ்ரேலியப் பிரதமருக்கு, உள்நாட்டில் இதேபோன்ற அச்சுறுத்தல்களைப் பெறுவது சாத்தியமில்லை”என்று குறிப்பிட்டுள்ளார்.

நெதன்யாகு இப்போது தனது பிரதமர் அலுவலகத்தின் அடித்தளத்தில் உள்ள பதுங்கு குழிக்குள் பதுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக, பெஞ்சமின் நெதன்யாகு பதுங்கு குழியின் ஓடும் காட்சிகள் வெளியானது. இருப்பினும், அந்த வீடியோ மூன்று ஆண்டுகள் பழமையானது என்றும், இஸ்ரேலிய பாராளுமன்றமான Knesset இன் வழியாக சென்றதாக சொல்லப்பட்டது.

சில வாரங்களுக்கு முன், ட்ரான் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இப்போது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆம், கடந்த அக்டோபர் 19-ந்தேதி இதே வீட்டின், மீது ஹமாஸ் அமைப்பு ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்