மக்களை பாதுகாக்க தவறிய நெதன்யாகு! ஹமாஸ் பிடியில் ஊள்ள 3 பெண் பணயக் கைதிகள் கதறும் வீடியோ!
230க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்களை பணயக் கைதிகளாக வைத்திருக்கும் ஹமாஸ், மூன்று பெண் பணயக் கைதிகள் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 7ஆம் தேதி தொடங்கி 3 வாரங்களை கடந்து இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதனிடையே இருதரப்பும் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் தாக்குதல் அதிகரித்து வருவதால் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
இந்த நிலையில், நேற்றைய தினம் ஹமாஸால் வெளியிட்ட ஒரு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அக்டோபர் 7 ஆம் தேதி தாக்குதல்களின் போது, ஹமாஸால் பிடிப்பட்ட மூன்று இஸ்ரேல் பெண் பணயக் கைதிகள் அதிர்ச்சி தகவலை பகிர்ந்துகொண்டனர்.
Footage of 3 Israeli hostages released condemning Netanyahu. Even these female prisoners know that it is Israel which is sabotaging a ceasefire.
Thank you @DD_Geopolitics for posting the translated version.pic.twitter.com/Z1O4aGmRvm
— The Barracks (@thebarrackslive) October 30, 2023
அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள மூன்று இஸ்ரேல் பெண்களும் யெலினா ட்ருபனோப், டேனியல் அலோனி மற்றும் ரிமோன் கிர்ஷ்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும், பயங்கர குழுவான ஹமாஸ் தாக்குதலின் போது, இஸ்ரேலிய குடிமக்களைப் பாதுகாக்கத் தவறியதாகவும், ஹமாஸிடம் சிக்கியவர்களை மீட்டு வீடு திரும்ப உதவ தவறியதாகவும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பகிரங்க குற்றசாட்டை முன் வைத்துள்ளனர்.
ஹாலோவீன் கொண்டாட்டத்தில் அடுத்தடுத்த துப்பாக்கிச் சூடு! 11 பேர் பலி, 50க்கும் மேற்பட்டோர் காயம்!
குறிப்பாக, அந்த காணொலியில் போர்நிறுத்தம் செய்து பணயக்கைதிகளை மீட்கும் முயற்சியிலும் தோல்வியடைந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அவர்களில் ஒருவர், எபிரேய மொழியில் பேசுகையில், இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீன பணயக் கைதிகள் அனைவரையும் விடுவித்து இஸ்ரேல் பணயக் கைதிகள் அனைவரையும் திரும்புபெறுமாறு நெதன்யாகுவை வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, இந்த காணொளி குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது ஹமாஸின் வாக்குறுதி உளவியல் பயங்கரவாதம் என்று கூறியுள்ளார்.
காசாவில் கண்டெடுக்கப்பட்ட ஜெர்மன் டாட்டூ கலைஞர் உடல் .!
இஸ்ரேலிய வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களால் இதுவரை 8,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸின் தாக்குதலில் இஸ்ரேலில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இப்பொது, இரு தரப்பின் இறப்பு எண்ணிக்கை தற்போது 9,706 ஆக உள்ளது.