நேபாள் : பயங்கர நிலநடுக்கம் தற்போதைய நிலை என்ன?
திபெத் பகுதியில் மலைத்தொடர்களில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், அப்பகுதியில் உள்ள கிராமங்களில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
![Nepal Earthquake](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/01/Nepal-Earthquake-1.webp)
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், நேபாளத்தின் லாபுசே நகரிலிருந்து 93 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் நேபாளத்தின் காத்மாண்டு நகரில் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் டெல்லி, பீகார், அசாம் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டன எனவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 22,000 தற்காலிக கூடாரங்கள், துணிகள் மற்றும் நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 1,500க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய நிலை என்ன?
இந்த நிலநடுக்கத்தால் 95 பேர் உயிரிழந்ததாகவும், 130 பேர் காயமடைந்துள்ளதாகவும் முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவலின் படி, உயிரிழப்பின் எண்ணிக்கை 126 பேர்-ஆக உயர்ந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 180 க்கும் அதிகமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுக்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
மேலும், இதற்கு முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. பிப்ரவரி 25, 2015 அன்று, 7.8 ரிக்டர் அளவில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் நேபாளத்தில் ஏற்பட்டது. இதன் காரணமாக, 8000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.அதனை தொடர்ந்து இப்போது இந்த ஆண்டு உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
February 10, 2025![Dragon Trailer](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Dragon-Trailer.webp)
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025![Kane Williamson](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kane-Williamson-.webp)
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025![ind vs eng floodlight failure](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-floodlight-failure.webp)
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025![Jallikattu - Madurai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jallikattu-Madurai-.webp)