நேபாள அதிபர் ராமச்சந்திர பவுடல் திடீரென மருத்துவமனையில் அனுமதி.!

Default Image

நேபாளத்தின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்சந்திர பவுடல் வயிற்று வலி காரணமாக, காத்மாண்டுவின் மஹராஜ்கஞ்சில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலின்படி, ராம்சந்திர பவுடல் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டதாகவும், அதன் பிறகு நேற்று அவர் மருத்துவமனைக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பொது, அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளாராம். அவர் நலமாக இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்புதான், நேபாளத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் ராம் சந்திர பவுடல் நேபாள அதிபராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்