நேபாள விமான விபத்து – மீதமுள்ள 2 உடல்களை ட்ரோன் மூலம் தேடும் பணி தீவிரம்..!
நேபாள விமான விபத்தில், 70 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 2 உடல்களை ட்ரோன்கள் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
நேபாள தலைநகர் காத்மாண்டில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 10:33 மணிக்கு ஏ டி ஆர் 72 விமானம் பொக்காரா நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் 68 பயணிகளும், நான்கு விமான பணியாளர்களும் இருந்தனர்.
72 பேருடன் பயணித்த விமானம் தரையிறங்க சில நிமிடங்களில் இருந்த நிலையில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் உயிரிழந்த 68 பேரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 4 சடலங்களை தேடும் பனி தீவிரமாக நடைபெற்றது.
4 பேரில் இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. விபத்து ஏற்பட்ட பகுதியில் கடுமையான மூடுபனி நிலவுவதால், மீதமுள்ள 2 உடல்களை தேடுவதில் சிக்கல் நிலவுகிறது. இதனையடுத்து, மீதமுள்ள 2 உடல்களை ட்ரோன்கள் மூலம் தேடி வருகின்றனர்.