நேபாள விமான விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு.. பதை பதைக்கும் காட்சிகள்!
நேபாளம் : விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் காத்மாண்டு விமானத்தில் பயணம் செய்த 19 பேரில் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில், சவுரியா ஏர்லைன்ஸ் விமானம், 19 பேருடன் புறப்பட்ட சில வினாடிகளிலேயே ஓடுபாதையில் கட்டுப்பாட்டை இழந்து, விபத்தில் சிக்கியது. இதில், 18 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டபோது, ஓடுதளத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பான பதை பதைக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது.
BREAKING NEWS : This video of the moment when the Saurya Airlines plane crashed at the TIA Airport in Kathmandu.#Nepal #Crash #NepalCrash #Video #Kathmandu #sauryaairlines #TIAAIRPORT pic.twitter.com/KCIfhaL18Q
— जन सुनवाई | Jan Sunwai (@JanSunwaiBharat) July 24, 2024
दुःखद घटना काठमांडू में विमान क्रेश में 18 लोगो की मौत! विमान काठमांडू से पोखरा जा रहा था।#Nepal #Kathmandu #Nepal #planecrash#NepalPlaneCrash pic.twitter.com/ToBEzo32hq
— Vishnu_Choudhary_007 (@VishnuDidel_007) July 24, 2024
தீயணைப்பு வீரர்கள் மற்றும் நேபாள ராணுவத்தினர் சம்பவ இடத்தில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. 2023 ஆம் ஆண்டில், எட்டி ஏர்லைன்ஸ் விமானம் பொக்ரா மீது மோதியதில் ஐந்து இந்தியர்கள் உட்பட 72 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.