ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 5 மாதங்களுக்கு பிறகு, நேபாளம் அதிகாரப்பூர்வமாக ஒரே பாலின திருமணத்தின் முதல் பதிவை செய்துள்ளது. இதனால், ஒரே பாலின திருமணத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த முதல் தெற்காசிய நாடு நேபாளம் ஆகும்.
நேபாளத்தில் தன் பாலினத் திருமணங்களுக்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த 2007-ம் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து 2015ம் ஆண்டில் இயற்றப்பட்ட புதிய அரசமைப்பு சட்டத்திலும் பாலினத் தேர்வின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாடு காட்டக்கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் நேபாளத்தில் மாயா குருங் (வயது 35) என்ற திருநங்கைக்கும், சுரேந்திர பாண்டே (வயது 27) என்ற சமபாலின சேர்க்கையாளருக்கும் இடையே சட்டபூர்வமாக நடைபெற்ற திருமணத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
கணவன் – மனைவி சண்டை.! டெல்லியில் தரையிறங்கிய பாங்காங் விமானம்.!
இதுதொடர்பான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஜூன் 27 அன்று தன் பாலினத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஆனால், ஓரினச்சேர்க்கை திருமணத்தை தற்காலிகமாக பதிவு செய்வதற்கான வரலாற்று உத்தரவு இருந்தபோதிலும், காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் நான்கு மாதங்களுக்கு முன்பு தேவையான சட்டங்கள் இல்லாததைக் காரணம் காட்டி இந்த நடவடிக்கையை நிராகரித்தது. அந்த சமயத்தில் சுரேந்திர பாண்டே மற்றும் மாயாவின் திருமண விண்ணப்ப பதிவு நிராகரிக்கப்பட்டது.
இதன்பின், உச்சநீதிமன்றம் தன் பாலினத் திருமணங்கள் பதிவு செய்ய சட்ட அங்கீகாரம் அளித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு வந்து 5 மாதங்கள் ஆன நிலையில், மாயா குருங் என்ற திருநங்கைக்கும், சுரேந்திர பாண்டே என்ற சமபாலின சேர்க்கையாளருக்கும் இடையே சட்டப்பூர்வமாக நடந்த திருமணம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. இதனால் ஒரே பாலின திருமணத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த முதல் தெற்காசிய நாடு நேபாளம் ஆகும்.
இதுதொடர்பாக ப்ளூ டயமண்ட் சொசைட்டியின் தலைவர் சஞ்சிப் குருங் (பிங்கி) கூறியதாவது, மாயா குருங், சுரேந்திர பாண்டே ஆகியோரது திருமணம் மேற்கு நேபாளத்தில் உள்ள லாம்ஜங் மாவட்டத்தின் டோர்டி கிராமப்புற நகராட்சியில் பதிவு செய்யப்பட்டது. நேபாளத்தில் பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் நலனுக்காக பாடுபடுகிறோம். நேபாளத்தின் மூன்றாம் பாலின சமூகமான எங்களுக்கு இது ஒரு பெரிய சாதனையாகும். இதை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் : வரிசையில் நின்று வாக்களித்த ராஜமௌலி, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி.!
தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக, சம பாலினத் திருமணங்களை அதிகாரபூா்வமாகப் பதிவு செய்யும் நடைமுறை நேற்று நேபாளத்தில் தொடங்கப்பட்டது. நாங்கள் இந்த முடிவை வரவேற்கிறோம். குடும்பத்தினரின் ஒப்புதலுடன் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட நவல்பரசி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திராவும், லாம்ஜங் மாவட்டத்தைச் சேர்ந்த மாயாவும் கடந்த 6 ஆண்டுகளாக கணவன்-மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
பல மூன்றாம் பாலின தம்பதிகள் தங்கள் அடையாளங்கள் மற்றும் உரிமைகள் இல்லாமல் வாழ்கின்றனர். இது அவர்களுக்கு நிறைய உதவப் போகிறது. இந்த சமூகத்தின் மற்ற மக்களுக்கு அவர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான கதவு இப்போது திறக்கப்பட்டுள்ளது. இப்போது அவர்களின் திருமணம் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டு, தேவையான சட்டங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அது தானாகவே நிரந்தர அங்கீகாரத்தைப் பெறும் எனவும் தெரிவித்தார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…