காணாமல் போன நேபாள ஹெலிகாப்டர் விபத்து: 5 பயணிகள் உயிரிழப்பு.!
நேபாளத்தில் காணாமல் போன ஹெலிகாப்டர் எவரெஸ்ட் சிகரத்தில் மோதி நொறுங்கியது.
ஐந்து வெளிநாட்டவர்கள் உட்பட 6 பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று நேபாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தில் இருந்து இருந்து காத்மாண்டு தலைநகரம் நோக்கி பயணித்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போனது. இந்நிலையில், காணாமல் போன ஹெலிகாப்டரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
தற்போது, 6 பேருடன் சென்ற அந்த ஹெலிகாப்டர், எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகே விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேடுதல் பணியில் 5 பயணிகள் சடலங்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானத்தில் இருந்த ஒருவர் இன்னும் காணவில்லையாம், காணாமல் போன நபரை தேடும் பணி இப்பொது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உலகின் மிக உயரமான சிகரத்தை பார்வையிடுவதற்காக ஐந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துக்கொண்டு இன்று காலை தலைநகர் காத்மாண்டுவுக்கு திரும்புகையில் இந்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மெக்சிகோ நாட்டவர்கள் என்றும், விமானி நேபாளர் என்றும் சொல்லப்படுகிறது.