நேபாளம் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 30க்கும் மேற்பட்டோர் பலி!
நேபாளத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கி சரிந்ததில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் நேபாளத்தில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 எனப் பதிவாகியிருக்கிறது.
நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் உள்ள லோபூச்சிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் நிகழ்ந்திருக்கிறது என யுனைடெட் ஸ்டேட்ஸ் ஜியோலாஜிக்கல் சர்வே அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பீகார், அஸ்ஸாம் உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டிருக்கிறது.
நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியே சாலையில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சீனாவிலும் உயிரிழப்பு இருக்கலாம் என அச்சம் ஏற்ப்பட்டுள்ளது.
மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். தற்போது, இடிபாடுகளில் சிக்கி இருப்போரை மீட்பு பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இதற்கு முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.