பாகிஸ்தான் நாடளுமன்ற தேர்தலில் தனது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். அதே நேரம் இம்ரான் கானுடன் தொடர்புடைய சுயேட்சைகளின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். பாகிஸ்தானின் தேசிய அவை (நாடாளுமன்றம்) மற்றும் மாகாண சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி மற்றும் அதன் ஆதரவு பெற்ற சுயேட்சைகள், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – (நவாஸ்) கட்சியை விட சற்று முன்னிலை வகிப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், பாகிஸ்தான் தேர்தலில் தனது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக நவாஸ் ஷெரீப் சற்றுமுன்னர் தெரிவித்திருக்கிறார். இதோடு, இம்ரான் கானுடன் தொடர்புடைய சுயேட்சைகளின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிப்பதாகவும் கூறிய ஷெரீப் தனது கட்சி எத்தனை இடங்களை வென்றது என்பது பற்றி எதுவும் கூறவில்லை. எப்படியிருப்பினும், தேர்தல் குழுவால் வெளியிடப்பட்ட சமீபத்திய எண்ணிக்கையில் அவரது பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சி 42 இடங்களை மட்டுமே வென்றதாக தெரிவிக்கப்பட்டது. இது அரசாங்கத்தை அமைக்க உரிமை கோருவதற்குத் தேவையான இடங்களை விட மிகவும் குறைவானதாகும்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…