பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமையவுள்ள நிலையில், பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப்பை அவரது சகோதரர் நவாஸ் ஷெரீப் பரிந்துரை செய்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த வாரம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி (சுயேட்சை), முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.
வாக்கு எண்ணிக்கையில் இழுபறி இருந்தாலும், பாகிஸ்தான் பொதுத்தேர்தல் முடிவுகள் 3 நாட்களில் அறிவிக்கப்பட்டது. ஆனால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், யார் ஆட்சி அமைக்க போவது அல்லது யார் யாருடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்பதது என குழப்பம் நீடித்தது.
பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவியேற்பார்: ஷெபாஸ் ஷெரீப் உறுதி
இதில், இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் 91 தொகுதிகள், நவாஸ் ஷெரீப்பின் கட்சி 75 தொகுதிகள், பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வென்றிருந்தது. இதன் காரணமாக யாருக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், 266 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் தனிப் பெரும்பான்மையைப் பெறுவதற்கு இந்த இரு கட்சிகளுக்கும் போதுமான இடங்கள் உள்ளன.
இதனால், பாகிஸ்தானில் கூட்டணியை ஆட்சியை அமைக்க நவாஸ் ஷெரிப் மற்றும் பிலாவல் பூட்டோ முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமையவுள்ள நிலையில், பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப்பை (72) அவரது சகோதரர் நவாஸ் ஷெரீப் (74) பரிந்துரை செய்துள்ளார்.
பிலாவல் பூட்டோ சர்தாரி பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகி, நவாஸ் ஷெரீப் தலைமையிலான PML-N முன்வைக்கும் எந்தவொரு வேட்பாளரையும் தனது கட்சி ஆதரிக்கும் என்று அறிவித்தார். ஏற்கனவே, பாகிஸ்தான் பிரதமராக இருந்த ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் புதிய பிரதமராக விரைவில் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…