பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி… புதிய பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப்!

Shehbaz Sharif

பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமையவுள்ள நிலையில், பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப்பை அவரது சகோதரர் நவாஸ் ஷெரீப் பரிந்துரை செய்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த வாரம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி (சுயேட்சை), முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.

வாக்கு எண்ணிக்கையில் இழுபறி இருந்தாலும், பாகிஸ்தான் பொதுத்தேர்தல் முடிவுகள் 3 நாட்களில் அறிவிக்கப்பட்டது. ஆனால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், யார் ஆட்சி அமைக்க போவது அல்லது யார் யாருடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்பதது என குழப்பம் நீடித்தது.

பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவியேற்பார்: ஷெபாஸ் ஷெரீப் உறுதி

இதில், இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் 91 தொகுதிகள், நவாஸ் ஷெரீப்பின் கட்சி 75 தொகுதிகள், பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வென்றிருந்தது. இதன் காரணமாக யாருக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், 266 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் தனிப் பெரும்பான்மையைப் பெறுவதற்கு இந்த இரு கட்சிகளுக்கும் போதுமான இடங்கள் உள்ளன.

இதனால், பாகிஸ்தானில் கூட்டணியை ஆட்சியை அமைக்க நவாஸ் ஷெரிப் மற்றும் பிலாவல் பூட்டோ முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமையவுள்ள நிலையில், பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீப்பை (72) அவரது சகோதரர் நவாஸ் ஷெரீப் (74) பரிந்துரை செய்துள்ளார்.

பிலாவல் பூட்டோ சர்தாரி  பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகி, நவாஸ் ஷெரீப் தலைமையிலான PML-N முன்வைக்கும் எந்தவொரு வேட்பாளரையும் தனது கட்சி ஆதரிக்கும் என்று அறிவித்தார். ஏற்கனவே, பாகிஸ்தான் பிரதமராக இருந்த ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் புதிய பிரதமராக விரைவில் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்