ஊழியர்கள் டிக்டாக் பயன்படுத்த தடை..! பாதுகாப்பு கருதி நேட்டோ அமைப்பு நடவடிக்கை.!
பாதுகாப்பு கருதி வாஷிங்க்டன், நோட்டோ அமைப்பானது தங்கள் ஊழியர்கள் நோட்டோ மின்னணு சாதனங்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை விதித்துளளது.
வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நேட்டா அமைப்பானது, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள 30 நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பாகும்.
டிக்டாக் தடை :
இந்த அமைப்பானது கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதன் ஊழியர்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில், பாதுகாப்பு கரணங்கள் கருதி டிக்டாக் செயலியை நேட்டோ ஊழியர்கள் பயன்படுத்த தடைவிதித்தனர்.
பாதுகாப்பு நடவடிக்கை :
சீனாவை தலைமையிடமாக கொண்ட டிக்டாக் நிறுவனமானது, தனது செயலி மூலம் தகவல்களை எடுத்துக்கொள்ளும் அபாயம் உள்ளதாக கருதி, டிக்டாக் செயலியை ஊழியர்கள், நேட்டோ மின்னணு சாதனங்களில் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
பிற நாடுகளில்.. :
இதே போல, ஏற்கனவே இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய பாராளுமன்றம், நார்வே உள்ளிட்ட சில நாடுகளிலும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மின்னனு சாதனங்களில் டிக்டாக் தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதுமே இந்த டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளது.