நாசாவானது சந்திரனுக்கு செல்லும் ஆர்ட்டெமிஸின் இரண்டாவது விண்கலம் $1.15 பில்லியன் ஒப்பந்தத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
நாசா, 2வது ஆர்டெமிஸ் சந்திரனுக்கு (மூன் லேண்டரின்) செல்லும் விண்கலத்தின் 1.15 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியது. இதனையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், நாசாவின் இந்த செயலை பாராட்டும் விதமாக ஸ்பேஸ் எக்ஸ் நாசாவின் நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாது என்று ட்வீட் செய்திருந்தார்.
நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து சந்திரனில் விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்வதற்காக இணைந்துள்ளது.
மற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முதலில் இந்த ஏலத்திற்கு பங்குபெற தடை விதிக்கப்பட்டிருந்தது, பிறகு நாசா விண்வெளி வீரர்களை நிலவின் மேற்பரப்பில், தரையிறக்க ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைந்து பணியாற்ற ஒப்பந்தத்தை வழங்கியது. ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 1.15 பில்லியன் டாலர்கள் என்று நாசா கூறியது.
இதற்கு முன்னதாக நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 சந்திரன் மிஷன் விண்கலம், கடந்த புதன்கிழமை கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதள வளாகத்திலிருந்து புறப்பட்டது. 2027 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படவுள்ள நாசாவின் ஆர்ட்டெமிஸ் IV பணியின் ஒரு பகுதியாக ஸ்பேஸ்எக்ஸ் அதன் ஸ்டார்ஷிப் மூன் லேண்டரை உருவாக்க உள்ளது.
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…