38 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் விழுந்த நாசாவின் செயற்கைக்கோள்
நாசாவின் ஓய்வுநிலை செயற்கைகோள், 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பூமியில் விழுந்துள்ளது.
பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்பட்ட, நாசாவின் ஓய்வுபெற்ற செயற்கைக்கோள், 38 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பூமிக்கு திரும்பி வந்து விழுந்தது. 2,450 கிலோ எடையுள்ள பூமியின் இந்த கதிர்வீச்சு பட்ஜெட் செயற்கைக்கோள், 1984ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் பெரிங் கடல் மீது, பூமியின் வளிமண்டல பகுதியில், மீண்டும் நுழைந்ததாக நாசா தெரிவித்துள்ளது, ஆனால் செயற்கைக்கோளின் பாகங்கள் விழுந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், சேதம் ஏற்படும் அபாயம் மிகக் குறைவு என்று நாசா ஏற்கனவே தெரிவித்தது.
Update: @NASA’s retired Earth Radiation Budget Satellite reentered Earth’s atmosphere over the Bering Sea at 11:04 p.m. EST on Sunday, Jan. 8, the @DeptofDefense confirmed. https://t.co/j4MYQYwT7Z
— NASA Earth (@NASAEarth) January 9, 2023