செவ்வாய் கிரகத்தின் பாறை மாதிரிகளை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் நாசா..

பிப்ரவரி 2021 இல் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்ஸெவெரன்ஸ் ரோவர், இதுவரை 11 மாதிரிகளை சேகரித்துள்ளது. பூமியில் விரிவான ஆய்வக ஆய்வுக்காக அவற்றை மீண்டும் கொண்டு வருவது மிகவும் சிக்கலான பணியாக உள்ளது. எனவே 2033 ஆம் ஆண்டில் 30 செவ்வாய் பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர நாசா திட்டமிட்டுள்ளது.

நாசா செவ்வாய் கிரகத்திற்கு மற்றொரு ரோவரை அனுப்பி பெர்ஸெவெரன்ஸ் ரோவரில் இருந்து மாதிரிகளை எடுக்க அந்த பாறை மாதிரிகளை சுற்றுப்பாதையில் செலுத்தி, அங்கு அவை ஒரு ஐரோப்பிய விண்கலத்தால் சேகரிக்க திட்டமிட்டுள்ளது.

2028 ஆம் ஆண்டு பூமியிலிருந்து ஏவப்பட்டு 2030 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் இந்த லேண்டர் இரண்டு மினி ஹெலிகாப்டர்களையும் சுமந்து செல்லும். இரண்டு ஹெலிகாப்டர்களும் சற்று கனமானதாகவும், தரையில் நகரும் வகையில் சக்கரங்கள் பொருத்தப்பட்டதாகவும், மாதிரிகளை மீட்டெடுக்க அனுமதிக்கும் வகையில் சிறிய கையுடன் வரும். மாதிரிகளை மீட்டெடுத்த பின்னர் 2033 இல் பூமிக்குத் திரும்பும் என்று நாசா கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்