“என்னுடைய வெற்றி மிகப்பெரிய வித்தியாசத்தில் அமையும்”…டொனால்ட் டிரம்பு உறுதி!
நான் வெற்றி பெறுவேன் என வலுவான நம்பிக்கை உள்ளது என புளோரிடா மாகாணத்தில் மேற்கு கடற்கரை பகுதியில் வாக்கு செலுத்திய பிறகு டொனால்ட் டிரம்பு தெரிவித்தார்.
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் கமலாஹாரிஸும் களம் காண்கிறார்கள். தற்போது, தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலையிலிருந்தே ட்ரம்ப் பல மாகாணங்களில் முன்னிலை வகித்து வந்தார்.
எனவே, டொனால்ட் ட்ரம்ப், கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வெற்றிக்கு இன்றும், 270 எலக்டோரல் வாக்குகள் மட்டுமே தேவைப்படும் நிலையில், 230 எலக்டோரல் வாக்குகள் பெற்று டொனால்ட் ட்ரம்ப், முன்னிலை வகித்து வருகிறது. அதைப்போல, 210 எலக்டோரல் வாக்குகள் பெற்று கமலா ஹாரிஸ் பின்னடைவில் இருக்கிறார்.
இந்நிலையில், தொடர்ச்சியாகக் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்று வருவதால், வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில், ஆதரவாளர்களிடம் பேசுவதற்காக பாம் பீச் சென்றார். அங்கு தற்போது நம்மளுடைய வெற்றியைத் தடுக்க முடியாது என உரையாற்றி வருகிறார். அதற்கு முன்னதாக, டிரம்ப் தனது மனைவி மெலனியா உடன் புளோரிடா மாகாணத்தில் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள மண்டேல் பொழுதுபோக்கு மையத்தில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களித்தார்.
அங்குச் சென்று வாக்களித்த பிறகு தான் வெற்றிபெறுவதில் முழு நம்பிக்கையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர் ” நான் வெற்றி பெறுவேன் எனப் பெரிய நம்பிக்கை எனக்கு முழுவதுமாக உள்ளது. குடியரசு கட்சியினர் அதிக எண்ணிக்கையில் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். எனவே, என்னுடைய வெற்றி என்பது மிகப்பெரிய வித்தியாசத்தில் அமையும்.” என உறுதியாகத் தெரிவித்தார்.