வியன்னா: ஆஸ்திரியா நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்குள்ள இசைகலைஞர்கள் வந்தே மாதரம் இசைத்து வரவேற்றனர்.
பிரதமர் மோடி, ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். முன்னதாக ரஷ்யாவில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவிற்கு சென்றுள்ளார்.
1983ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி ஆஸ்திரியா நாட்டிற்கு சென்ற பிறகு 41 ஆண்டுகள் கழித்து இந்திய பிரதமர் ஒருவர் தற்போது தான் ஆஸ்திரியா நாட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா – ஆஸ்திரியா நாடுகளுக்கு இடையேயான 75 ஆண்டுகால நட்பை போற்றும் வகையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாக ஆஸ்திரியா நாட்டு அரசு கூறியுள்ளது.
நேற்று வியன்னா சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் ஷால்லென்பெர்க் வரவேற்றார். அதன் பிறகு ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாம்மர் பிரதமர் மோடிக்கு அதிபர் மாளிகையில் விருந்தளித்தார். அப்போது பிரதமர் மோடியுடன் ஆஸ்திரிய அதிபர் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, ஆஸ்திரிய இசைக்கலைஞர்கள் நடத்திய இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது இசை கலைஞர்கள் வந்தே மாதரம் பாடலை பிரதமர் மோடி முன்னிலையில் இசைத்து கான்பித்தனர். இதனை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம்…
சென்னை : வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகையில் இருந்து 470 கிமீ தென் கிழக்கிலும் சென்னையில் இருந்து…
சென்னை : கனமழை முன்னெச்சரிக்கையாக தமிழகத்தின் பல பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாற்று தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்த…
சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு - வடமேற்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10…