Mr.பீஸ்ட்-ன் ‘சிறப்பான’ சம்பவம்! ஆப்பிரிக்காவில் காலை உணவு திட்டம்! 

மேற்கு ஆப்பிரிக்காவில் குறிப்பிட்ட பண்ணை பகுதிகளில் குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டத்தை ஆரம்பித்துள்ளளார் பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட்.

Mrbeast

ஆப்பிரிக்கா : யூ-டியூப் இணையதள பக்கத்தில் 376 மில்லியன் (37.6 கோடி) பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் அவ்வப்போது தனக்கு கிடைக்கும் வருவாயில் உலகின் பல்வேறு பகுதிகளில் மிகவும் ஏழ்மையில் இருக்கும் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார் ‘மிஸ்டர் பீஸ்ட்’ டொனால்ட்சன்.

இவர் ஏற்கனவே, கேமரூன், கென்யா, சோமாலியா, உகாண்டா, உள்ளிட்ட நாடுகளில் சுத்தமான நீர் கிடைக்காத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காக குடிநீர் ஆதாரமாக கிணறுகளை வெட்டி கொடுத்தார். அதுபோல பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவந்த அவர், குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்கள் பள்ளிக்கு செல்லும் வண்ணம் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார். இது தமிழ்நாட்டில் செய்லபடுத்தப்பட்டு வரும் திட்டம் தான்.

மேற்கு ஆப்பிரிக்காவில் துணை சகாரா பகுதியில் 5-ல் ஒரு குழந்தை பள்ளிக்கு செல்வதில்லை. அவர்கள் வறுமை காரணமாக அங்குள்ள சாக்லேட் மர பண்ணைகளில் வேலைபார்த்து வந்துள்ளனர். அந்த குழந்தைகளுக்காக காலை உணவு திட்டத்தை அங்கு செயல்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடுகையில், மேற்கு ஆபிரிக்காவில் உள்ள கோகோ பண்ணைகளில் குழந்தைத் தொழிலாளர்களை மீட்கும் பொருட்டு, பள்ளிகளில் காலை உணவை இலவசமாக வழங்கத் தொடங்கினோம். குழந்தைகளுக்கு உணவளிக்கப்படும் என்று தகவல் தெரிந்தால் அவர்கள் பள்ளிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன் மூலம் முதல் வாரத்தில் மட்டுமே ஒரு பள்ளியின் வருகை 10% அதிகரித்துள்ளது என மகிழ்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்